இன்று (பிப்ரவரி 26) மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் பாராளுமன்றத்தில் - வரும் நிதியாண்டிற்கான (2013-14) பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் புதிதாக பயணியர் கட்டணத்தில் எந்த உயர்வும் அறிவிக்கப்படவில்லை. தட்கல் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. சரக்கு போக்குவரத்து கட்டணம் சற்று அதிகரிக்கப்பட்டது. கடந்த மாதம் - சிறு அளவில் பயணியர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் முழு உரையை காண இங்கு அழுத்தவும்
பட்ஜெட் சாராம்சம் காண இங்கு அழுத்தவும்
=> திருச்செந்தூர் - பழனி மார்க்கத்தில் புதிய பயணியர் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
=> மேலும் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை வரையிலான பெட்டிகள் தற்போது இணைக்கப்படுகின்றன. இது - இனி தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
=> இணையதளம் மூலமான முன் பதிவு நள்ளிரவு 12:30 முதல் இரவு 11:30 அனுமதிக்கப்படும்.
=> மொபைல் போன்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
=> எஸ்.எம்.எஸ். மூலம் பயணியர்களுக்கு டிக்கெட் முன்பதிவு நிலை அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
=> இ - டிக்கட் வசதியில் தற்போது பல சிரமங்கள் உள்ளன. அதனை நிவர்த்தி செய்ய, நிமிடத்திற்கு 2000 டிக்கெட்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் தற்போதைய வசதி, நிமிடத்திற்கு 7200 என உயர்த்தப்படும்.
=> ஒரே நேரத்தில் 40,000 பயனீட்டாளர்களை தாங்கும் வசதி, ஒரே நேரத்தில் 1,20,000 பயனீட்டாளர்களை தாங்கும் அளவிற்கு தரம் உயர்த்தப்படும்.
|