சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், வரும் மார்ச் மாதம் 08ஆம் தேதியன்று, அவ்வமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைத்து காயலர்களும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எமதன்பின் ரியாத்வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 45ஆவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 08.03.2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு, ரியாத் ஃபத்ஹா Classic Party Hallஇல் நடைபெறவுள்ளது.
எனவே, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவரும், இச்செய்தியையே முறையான அழைப்பாகக் கருதி அவசியம் கலந்துகொள்ள வருமாறும், உங்களுக்கறிமுகமான அனைத்து காயலர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா N.M.இஸ்மாயில்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா |