தமிழக அரசின் சார்பில், மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று முதற்கட்டமாகவும், இம்மாதம் 24ஆம் தேதியன்று இரண்டாம் கட்டமாகவும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.
காயல்பட்டினத்தில் 14 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. முகாம் நாளான 24.02.2013 அன்று 2766 குழந்தைகளுக்கும், அடுத்த நாளான 25.02.2013 அன்று விடுபட்ட 639 குழந்தைகளுக்கும் என மொத்தம் 3405 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது.
முகாம் வாரியாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பட்டியல் வருமாறு:-
முகாம் ஏற்பாடுகளை, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயல்பட்டினம் வட்டார சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross