தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியது. இத்தேர்வு மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றது.
இந்தத் தேர்வுக்காக 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர். இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.
1. மாணவர்களின் நலன் கருதி மனம் இரங்குவார்களா...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[01 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25926
ப்ளஸ் 2 வுக்கு மட்டுமல்ல CBSC பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வும் துவங்கிவிட்டது. மாணவ மாணவியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்வு! ஆண்டு முழுவதும் ஆசிரியர்களின் அயராத உழைப்பு, மாணவர்களின் முயற்சி, பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கம், தியாகங்கள் இப்படி பல பேர்களின் கூட்டு முயற்சியும், பிரயத்தனமும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைய வேண்டிய மாபெரும் தவமிருப்பு என்றே சொல்லலாம். வாழ்த்துக்கள்...!
அதே நேரம் வருத்தமும், எரிச்சலும், மன உளைச்சலும் ஒருங்கிணைந்து இம் மாணவர்களின் உழைப்பில் மண்ணள்ளிப்போடும் மாபெரும் கொடுமை! உச்ச நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட (உச்சபாஷினி) ஒலிபெருக்கி குழாய்களை ஊர் முழுக்க கட்டி வைத்து மூலை முடுக்குகளில் நடக்கும் வைபவங்கள், விழாக்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் இரவில் நம் காதுகள் கிழியும் அளவிற்கு ஓய்வு ஒழிவு இன்றி ஒலிபரப்பப்பட்டு வருவதை யாரும் கண்டு கொள்வதேயில்லை!
என் தாயார் வீட்டிற்கு முன் புறமுள்ள மின்கம்பத்தில் குழாய் பொருத்தப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் என் சகோதரியின் மகன் தலையணையை வைத்து தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு பாடங்களை படித்து வருவதைக் கண்டு உள்ளம் வெதும்பினேன். குழாய்களைக் கட்டிய ஒளிபெருக்கி சர்வீஸ் நடத்துபவரிடத்திலும் தன்மையாக நிலமையை எடுத்துக் கூறினேன். எந்த பலனில்லை!
இபாதத்துக்கள் எனும் பெயரில் (இரு சாராருமான) இவர்கள் செய்யும் இடைஞ்சலுக்கு யார் பொறுப்பாளிகள்?
மாணவனின் கவனத்தை சிதறடிக்கச் செய்யும் இச்செயல் பொறுப்புள்ளவர்களின் கவனத்திற்கு வராதது ஏன்?
கைபேசியில் அழைப்பு வந்தால் கூட வீட்டின் உள்ளறைகுள் புகுந்து கொண்டு ஒரு காதைப் பொத்திக்கொண்டு விளங்கவில்லை விளங்கவில்லை என மறு முனையில் உள்ளவரிடம் மன்றாடும் கொடுமை!
பிள்ளைகளின் படிப்பு பாழானாலும் பரவாயில்லை என்று ஏன் இந்த பிடிவாதத்திற்கு மதச்சாயம் பூசி மழுப்புகின்றனர்? மார்க்க செய்திகள் தாராளமாக மக்களைச் சென்றடையட்டும் தவறில்லை! ஆனால் பள்ளிக்கூடங்களில் நடக்கும் தேர்வு காலங்களிலாவது ஒளிபெருக்கிக்கு ஓய்வு கொடுக்கலாமே? ப்ளீஸ்! நல்ல உள்ளம் கொண்டவர்கள் சிந்திப்பீகளாக! அல்லாஹ் ரஹ்மத்து செய்வானாக ஆமீன்!
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM)[02 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25937
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊர் .....நம் அருமை மாணவ / மாணவிகள் யாவர்களும் தற்போது நடை பெற்று வருகின்ற +2 பொதுத்தேர்வில் >>>> வல்ல இறைவன் அருளால் '' இன்ஷா அல்லாஹ் '' ரொம்பவும் அதிகமான மதி பெண்கள் பெற்று .....முன்னுக்கு வருவதோடு ...... தங்களின் + தங்கள் பெற்றோர்களின் '''' பல நற் கனவுகளை நிறை வேற்றிடவும்.......அடுத்த தாங்கள் யாவர்களும் புதியதாக கால் பதிகின்ற இந்த தருணம் தான் தங்களின் முன்னேற்றத்துக்கான முதல் படி .....ஆதலால் தாங்கள் யாவர்களும் மிகவும் நிதானத்துடன் கவனமாகவே செயல் பட்டு ....மேலும் நன்கு படித்து முன்னுக்கு வரவும் ......தங்கள் யாவர்களையும் வாழ்த்தி '' துவா'' செய்த வண்ணம் உள்ளேன் .எங்களின் இந்த '' துவாவை ''' வல்ல இறைவன் கபுலாக்கி தந்தருள் வானகவும் ஆமீன்.......................
என் தம்பி M.A.K. மக்தூம் அவர்களின் அருமை மகளார்.M.M.கதிஜா ஷபீகா அவர்களும் +2 பொதுத்தேர்வு எழுதுவதால் கூடுதல் மதி பெண்கள் பெற்று ''இன்ஷா அல்லாஹ்'' மாநிலத்தின் முதல் மதிப்பெண்கள் பெற்று விளங்கவும் . என் தம்பி மகளின் ஹக்கில் '' துவா'' கேட்டு ... வரும் படி நம் ஊர் அனைத்து நல்ல உள்ளம் கொண்ட மக்களைவும் மிகவும் தாழ்மையுடன்...மிகவும் மனம் உகந்து கேட்டு கொள்கிறேன்.
தங்கள் யாவர்களின் துவாவில் தான் நம் ஊர் பிள்ளைகளின் நலன் உள்ளது.
எம் அருமை நண்பரின் M.N.L.முஹம்மது ரபீக் அவர்களின் ஆதங்கம் முற்றிலும் நியாயமானதே......நம் ஊர் நல்ல உள்ளங்களின் எண்ணமும் .....எம் நண்பரின் ( M.N.L.முஹம்மது ரபீக் ) எண்ணம் போலும் ......எங்களின் எண்ணம் போலும் ...தயவு செய்து இந்த ஓலி பெருக்கி சவுண்டை தவிர்த்தல்......நம் +2 பிள்ளைகளுக்கும் / பெற்றோர்களுக்கும் ரொம்பவும் நன்றாகவே இருக்கும்.
பெற்றோர்கள் / ஆசிரியர்கள் / பள்ளி மாணவ & மாணவிகள் .....இவர்களின் ஒரு வருட கனவும் / நனவும் ....கலந்த உழைப்பு ......இதை நம் ஊர் நல்ல உள்ளம் படைத்தவர்களின் முழுமையான ஓத்துழைப்பு ரொம்பவும் அவசியம் ....+ நம் ஊர் பொது நல அமைப்புகளின் ஓத்துழைப்பும் .....அவசியம் தேவை ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross