வரும் கல்வியாண்டில் புதிதாகத் துவக்கப்படவுள்ள WISDOM PUBLIC SCHOOL பள்ளிக்கு, இலச்சினை (Logo) மற்றும் முழுக்கம் (Slogan) உருவாக்கப்படவுள்ளதாகவும், ஐந்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும், பள்ளியை நிர்வகிக்கும் VISION EDUCATIONAL TRUST சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க, அவற்றை அனுப்பி வைப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 07ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளியை நிர்வகிக்கும் Vision Educational Trust அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், காயல்பட்டினத்தில் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில், எமது VISION EDUCATIONAL TRUST சார்பில், Wisdom Public School பள்ளி, உங்கள் யாவரின் மேலான பேராதரவோடு வரும் கல்வியாண்டில் துவக்கப்படவுள்ளது.
இப்பள்ளிக்கு இலச்சினை (Logo) மற்றும் முழக்கம் (Slogan) திறமையாளர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாகவும், 28.02.2013 தேதிக்குள் அனுப்பித் தருமாறும் எம்மால் அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பு வெளியான நாள் முதல் இன்று வரை ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட இலச்சினை மற்றும் முழக்கங்கள் ஆர்வலர்களால் உருவாக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும், கால அவகாசத்தை இன்னும் சில நாட்கள் நீட்டிக்குமாறு பொதுமக்களில் பல ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வடிவமைக்கப்பட்ட இலச்சினை மற்றும் முழக்கத்தை அனுப்பி வைப்பதற்கான கடைசி நாள் - இம்மாதம் 07ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
வடிவமைக்கப்பட வேண்டிய முழக்கம் குறித்து சில சந்தேகங்கள் கேட்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்...
அதாவது, வடிவமைக்கப்படும் முழக்கம், பள்ளியின் நோக்கம் – லட்சியத்தைத் தாங்கி, 3 சொற்களுக்கு மிகாமலும், ஆங்கில மொழியிலும் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு, Vision Educational Trust சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|