மார்ச் 03ஆம் தேதி நடைபெறவுள்ள - மலபார் காயல் நல மன்ற (மக்வா) செயற்குழுவுக்கான தேர்தலில் மொத்தம் 24 பேர் போட்டியிடவுள்ளதாக அதன் நடப்பு பருவத்திற்கான கடைசி செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிட உள்ள வேட்பாளர்கள் விபரம் வருமாறு:
தகவல்:
S.E.செய்யது ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம்.
1. கவனமாக வாக்களியுங்கள். posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[02 March 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25947
அன்பான வாக்காளர்களே!
உங்களின் மேலான பார்வைக்காக MKWA தேர்தல் குழு வாக்காளர் பட்டியலை விபரமாக வெளியிட்டுள்ளார்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
தேர்தல் நாளான (03-03-2013) நாளை நமது புதிய செயற்குழுவிற்காக 15 நபர்களை மட்டும் அதற்க்கு மேல் ஆகி விடாமல், 15 நபர்களுக்கு அதிகம் ஆனால் அது செல்லாத்த வாக்காக ஆகி விடும் என்பதை மனதில் வைத்து மிகுந்த கவனத்துடன் வாக்களிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
2. Re:...தேர்தல் posted bymackie noohuthambi (kayalpatnam)[03 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25954
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு மினி சட்டமன்றம் நடத்துவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். இப்போது ஒரு மினி தேர்தல் நடப்பதை பார்க்கிறேன்.
இது எதிர்காலத்தில் நமது நகர்மன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் நாடாளு மன்றத்துக்கும் நடக்கும் தேர்தலுக்கு ஒரு முன்னோடி என்று நினைக்கிறேன். தேர்தலில் போட்டி இடுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நான் உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்போதுள்ள நடைமுறையை தொடர்வேன் அல்லது புதிய மாற்றங்களை முன்னோடி திட்டங்களை அறிமுகபடுதுவேன் என்ற கருத்தரங்கம் கலந்துரையாடல்கள் முன்னதாக நடந்ததா என்று தெரியவில்லை. போட்டி இடுபவர்கள் பொது வாழ்வில் பொது சேவையில் எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் தங்கள் அர்பணிப்புகளை ஆற்றியுள்ளார்கள் என்பது வாக்காளர்களுக்கு தெரியும். எனவே 15 பேரை தேர்ந்தெடுக்க வெறும் 24 பேர் தான் போட்டி இடுகிறார்கள் என்றால் உள்ளபடியே அவர்கள் பயந்து பயந்து ஊருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மை கொண்டவர்களாக தான் இருப்பார்கள். மீதி 9 பேரும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவர்கள் அடுத்த அடுத்த பொறுப்பிலே நியமிக்கபடுவார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு ஜனநாயக மரபு புதிதாக அரங்கேறுகிறது.
இன்றைய மினி தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்து ஊருக்கும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கும் மலபார் காயல் நல மன்றம் சிறப்பான சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross