கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் அமைப்பு மலபார் காயல் நல மன்றம் (மக்வா. இவ்வமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கோழிக்கோடு – கோட்டப்பரம்புவிலுள்ள மக்வாவின் கவுரவ ஆலோசகர் எஸ்.ஐ.ஜலீல் இல்லத்தில், இன்று காலை 10.30 மணிக்குத் துவங்கியது.
வாக்குப் பதிவு துவங்கிய நேரம் முதலே மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். நண்பகல் 11.30 மணி வரை விறுவிறுப்புடன் சென்ற வாக்குப்பதிவு, அதற்குப் பிறகு சிறிது மந்தமானது.
பின்னர், வாக்குப்பதிவு நேரம் நிறைவடையும் தருணத்தில் மீண்டும் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மதியம் 01.30 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்றதாக, தேர்தல் அதிகாரிகளான எஸ்.ஐ.ஜலீல், கிழுறு முஹ்யித்தீன், கவுஸ் முஹம்மத், சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 137
மொத்த வாக்குப்பதிவு: 106
அவற்றுள்,
நேரடி வாக்குப்பதிவு: 101
தபால் வாக்குப்பதிவு: 002
தொலைபேசி வாக்குப்பதிவு: 003
வாக்குப்பதிவு சதவிகிதம்: 77.37 %
மொத்தம் 15 பொறுப்பிடங்களுக்கு 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவுகள் மாலை 04.30 மணியளவில் வெளியிடப்படும் என அறியப்படுகிறது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரும், தமக்குள் கலந்தாலோசித்து, மன்றத்தின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். |