சிறுபான்மை மாணவ/மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (Merit Cum Means Based Scholarship) 929 மாணவர்களுக்கு (புதுப்பித்தல்) வழங்கப்பட்டது!
தொழில்கல்வி/தொழில்நுட்பக்கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ/மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (Merit Cum Means Based Scholarship) மத்திய அரசின் சிறுபான்மை துறை மூலம் வழங்கப்பட்டுவருகிறது.
இவ்வுதவி தொகை பெற மாணவர்கள் முந்தைய ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல்வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை (புதியது) பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் (2012-13), முந்தைய ஆண்டுகளில் உதவி தொகை பெற்ற, தமிழக சிறுபான்மை மாணவர்கள் - 929 பேருக்கு, புதுப்பித்தல் (Renewal) முறையில், இந்த உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross