பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1 அன்று மாநிலம் முழுவதும் துவங்கியது. இத்தேர்வுகள் மார்ச் 27 வரை நடைபெறும்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வுகளை 19,054 மாணவர்கள் எழுதுகின்றனர்.
கோவில்பட்டி கல்வி மாவட்டம்
--- ஆண்கள் = 2,774
--- பெண்கள் = 3,554
மொத்தம் = 6,328
தூத்துக்குடி கல்வி மாவட்டம்
--- ஆண்கள் = 5,643
--- பெண்கள் = 7,083
மொத்தம் = 12,726
மாவட்டம் மொத்தமாக
--- ஆண்கள் = 8,417
--- பெண்கள் = 10,637
மொத்தம் = 19,054
மாற்று திறனாளி மாணவர்கள்
--- கோவில்பட்டி கல்வி மாவட்டம் = 3
--- தூத்துக்குடி கல்வி மாவட்டம் = 16
மொத்தம் - 19
இம்மாணவர்கள் கூறுவதை உதவியாளர்கள் எழுத அனுமதிக்கப்படுவர். மேலும் - இம்மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்
மாவட்டத்தில் உள்ள மொத்த தேர்வு மையங்கள்
--- கோவில்பட்டி கல்வி மாவட்டம் = 17
--- தூத்துக்குடி கல்வி மாவட்டம் = 39
மொத்தம் - 56
மாவட்டத்தில் உள்ள தேர்வு எழுதும் மொத்த பள்ளிக்கூடங்கள்
--- கோவில்பட்டி கல்வி மாவட்டம் = 48
--- தூத்துக்குடி கல்வி மாவட்டம் = 105
மொத்தம் - 153
பறக்கும் படை விபரங்கள்
1) தலைவர் - மாவட்ட ஆட்சியர்
2) தலைமை கல்வி அலுவலர்
3) தலைமை கல்வி அலுவலர் (SSA)
4) மாவட்ட கல்வி அலுவலர்கள் (தூத்துக்குடி & கோவில்பட்டி)
5) மாவட்ட தொடக்கப் கல்வி அலுவலர்
6) சிறப்பு படை - தாசில்தார்கள் & RIS
ஒரு தேர்வு மையத்திற்கு இரு படை என 112 படைகள்.
பரீட்சை தாள்கள் தூத்துக்குடியில் உள்ள செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளியில் திருத்தப்படும். |