பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
கடந்த ஜனவரி 12 அன்று
காயல்பட்டினத்தில் DCW நிறுவனம் குறித்த ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய பலர் DCW தொழிற்சாலையால்
நகரில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசினர்.
அதே கூட்டத்தில் பேசிய ஒரு சிலர் - நகரில் பரவியுள்ள புற்றுநோய் போன்ற
நோய்களுக்கு காரணம் DCW தொழிற்சாலை இல்லை என்றும், அலைப்பேசி கோபுரங்கள் போன்ற காரணங்களும் உண்டு எனவும் கூறினர். அந்த
கருத்தை வலியுறுத்தி பேசியவர்கள் தங்களை இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம் (INDIAN HUMAN RIGHTS AND VIGILANCE
ORGANISATION) என்ற அமைப்பை சார்ந்தவர்களாக அறிமுகப்படுத்தி கொண்டனர். அக்கூட்டத்தில் அவ்வமைப்பின் செயலாளராக கூறப்பட்ட
வீரபாண்டியப்பட்டினத்தை சார்ந்த ஆல்வின் ரோட்ரிகோ என்பவரும் பேசினார்.
இக்கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் - அவ்வமைப்பின்
உறுப்பினராக தன்னை அடையாளம் காண்பித்துக்கொண்ட ஒருவர் - தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர், DCW தொழிற்சாலையின் மூத்த
அதிகாரிகளை சமீபத்தில் நேரடியாக சந்தித்ததாக கூறினார். அச்சந்திப்பின் போது, DCW அதிகாரிகள் பல விளக்கங்களை அவர்களுக்கு வழங்கியதாகவும்
கூறினார்.
ஜனவரி 12 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பலருக்கு - இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம் குறித்த அறிமுகம் அன்றுதான்.
நகரில் வேறு சிலருக்கு இவ்வமைப்பின் உறுப்பினர்களாக நகரில் அடையாள அட்டை வைத்துள்ள சிலரின் மூலம் இவ்வமைப்பு குறித்து அறிமுகம்
உண்டு. ஒரு சிலர் - இவ்வமைப்பு குறித்து தினமலர் மற்றும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வந்த செய்திகள் மூலம் அறிந்திருப்பர்.
தினமலர் செய்திகள் ...
செய்தி 1 |
செய்தி 2 |
செய்தி 3
தினமணி செய்திகள் ...
செய்தி 1 |
செய்தி 2
நகரில் வேறு சிலர் இவ்வமைப்பு பெயரிலான லெட்டெர் பேட் கொண்டு சில அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட புகார்கள் மூலம் இவ்வமைப்பு
பற்றி அறிந்திருப்பர்.
மேலே காணும் - லெட்டெர் பேட் நகல்களில் இவ்வமைப்பின் மாவட்ட புலனாய்வு குழு தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள வி.எஸ்.எல். அப்துல்லாஹ் சாஹிப், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மூன்றாவது வார்ட் உறுப்பினர் சாரா உம்மாளின் கணவர்.
இவ்வமைப்பின் மாவட்ட தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ஜான் சிரோன்மணி - காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இவ்வமைப்பு பெயர் குறிப்பிடப்பட்ட லெட்டெர் பேடில், கடந்த ஜூன் மாதம் தகவல் ஒன்று செய்தி வெளியிடுவதற்காக காயல்பட்டணம்.காம்
இணையதளத்திடம் வழங்கப்பட்டது.
லெட்டெர் பேடில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வமைப்பு குறித்த சில விபரங்கள் சில சந்தேகங்களை கிளப்பியதால் -
அச்செய்தி அப்போது வெளியிடப்படவில்லை.
அச்சம்பவத்திற்கு பிறகு, இவ்வமைப்பு குறித்த சில விபரங்களை - தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சென்னை, புது டெல்லி உட்பட
பல ஊர்களில் இருந்து காயல்பட்டணம்.காம் பெற்றது.
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |