பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
பொது நல அமைப்புகள் - அறக்கட்டளைகளாகவோ, சங்கங்களாகவோ - பதிவு செய்யப்படுவது உண்டு. இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு
கழகம் (INDIAN HUMAN RIGHTS AND VIGILANCE ORGANISATION) அமைப்பு பெயரில் பயன்படுத்தப்பட்ட லெட்டெர் பேடில் - இவ்வமைப்பு
1) அரசு பதிவு எண் 75/2009 பெற்றுள்ளதாகவும்
2) இதன் தலைமை அலுவலகம் சென்னையில் 2/23, Nehru Street, Padikuppam, Chennai - 600 017 என்ற முகவரியில் உள்ளதாகவும்,
3) இதன் தேசிய அலுவலகம் 202/2, Mehrauli, New Delhi - 110 036 என்ற முகவரியில் உள்ளதாகவும்
தெரிவிக்கிப்பட்டிருந்தது.
சங்கங்கள் பதிவு தமிழகத்தில் மாவட்ட அளவில் நடைபெறும். ஆகவே - ஒரு சங்கம் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிடும்போது - பதிவு செய்யப்பட்ட
மாவட்டத்தையும் குறிப்பிடுவது வழக்கம். இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழக லெட்டெர் பேடில் அரசு பதிவு எண் 75/2009 என்று மட்டுமே
குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவு செய்யப்பட்ட மாவட்டம் எது என்பது குறிப்பிடப்படவில்லை.
லெட்டெர் பேடில் இவ்வமைப்பின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளதாகவும், அலுவலக பின்கோட் - சென்னை - 17 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை 600 017 என்பது டி.நகர் பகுதி. அது முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள பாடிக்குப்பம் பகுதியில் சேராது.
இவ்வமைப்புக்கு என சில மாதங்களுக்கு முன் ஒரு இணையதளம் துவக்கப்பட்டிருந்தது. தற்போது செயல்பாட்டில் இல்லாத அந்த இணையதளம்
(www.ihrvo.org) - S16 Creative Labz என்ற கோயம்புத்தூர் நிறுவனம் மூலம்
தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த இணையதளம் - சென்னை முகவரி பின்கோடாக கோயம்பேடு அருகில் உள்ள பாடிகுப்பம் பகுதி பின்கோடை (600
107) பதிவு செய்திருந்தது. லெட்டெர் பேடில் பின்கோட் தவறாக அச்சிடப்பட்டிருந்தது தெரிந்தது.
www.ihrvo.org இணையதள முகப்பு பக்கம் ...
சென்னை மண்டலத்தில் உள்ள ஐந்து பத்திர பதிவு மாவட்டங்களில், ஏதாவது ஒன்றில் இவ்வமைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற
அனுமானத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
விசாரித்ததில் - மத்திய சென்னை பத்திர பதிவு அலுவலகத்தில் INDIAN HUMAN RIGHTS VIGILANCE ORGANISATION என்ற பெயரில் அமைப்பு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அமைப்பின் பெயர் ஒன்றாக இருந்தாலும் - லெட்டெர் பேடில் இருந்த அமைப்பின் பதிவு எண், நிர்வாகிகள் பெயர் வேறாக இருந்தது.
சென்னை அமைப்பின் முகவரி, நிர்வாகிகள் ...
நகரில் சிலரால் பயன்படுத்தப்படும் லெட்டெர் பேட் நகல் ...
காயல்பட்டணம்.காம் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த அமைப்பின் நிர்வாகி ஒருவரிடம் விசாரித்ததில் - லெட்டெர் பேடில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும், தங்கள் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
இதே பெயரில் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் பதிவு செய்திருக்கலாம் என்ற அனுமானத்தில் - மாநிலத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பதிவுத்துறை பதிவேட்டில் - இவ்வமைப்பு குறித்த தகவல்கள் தேடப்பட்டது.
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |