பொதுவாக மழை பெய்யும் காலங்களில் காயல்பட்டினத்தின் பல சாலைகளில் மழை நீர் தேங்கி காணப்படுவது வழமை.
ஆனால், சில பொதுமக்கள் தங்கள் இல்லங்களின் கழிவு நீரை - செப்டிக் டேங்க் போன்ற முறையான வடிகால் எதுவுமின்றி நடு வீதிக்குத் திறந்து விடுவதாலும் நகரின் சில தெருக்களில் அசுத்த நீர் தேங்கி காணப்படுவதுமுண்டு.
கடந்த சில நாட்களுக்கு முன், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து வெளியான கழிவு நீர் அப்பகுதியிலுள்ள சாலையைக் குளமாக்கி, பொதுமக்களுக்கு அவதியளித்த காட்சி:-
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[05 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26022
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் இந்த தகவல் நம் ஊர் அனைத்து பொது மக்களுக்கும் நல்லதோர் செய்திதான்....... சம்பந்த பட்ட வீட்டு நபர்கள் இதை சரி செய்வது தான் .....தொழுகைக்கு செல்பவர்களுக்கும் + பொது மக்களுக்கும் நல்லது .......
நம் ஊர் அனைத்து பொது மக்களும் இது போன்ற செயல் பாட்டை தயவு செய்து தவிர்பது நல்லது .
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
28 / 88, AMBALA MARAIKAR STREET
NAINAR HOUSE
KAYAL PATNAM
9629 6542 28
3. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[05 March 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26025
ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு நிகழ்வு பதம் என்பது போல, இது மாதிரி பல வீடுகளில் கழிவு தண்ணீரை தெருவில் விடுவது சர்வசாதரணமாக நிகழ்கின்றது.
அதிகமான வீடுகளில் வாசிங் மிசின் உபயோகிக்கும் தண்ணீரை வெளியில் விடுவது வாடிக்கையாகி விட்டது, ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று விசாரித்தால், கான் நிறைந்து விடும், அடிக்கடி கானை அள்ளிக்கொண்டு இருக்க முடியுமா?..? என்று சல்மான் கான், அமீர்கான் அளவிற்கு பதில் கொடுக்கின்றார்கள்.
இதற்க்கு ஒரே மருந்து " நகராட்சி அபராதம் " விதிப்பது தான்.
4. ஈமான் உடையோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[05 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26032
பொதுமக்கள் வசிக்கும் தெருக்களில் கழிவு நீர் ஓடை மற்றும் பாதள சாக்கடை இல்லாத ஒரே ஊர் நம்ம ஊர்தான்! ஆனால் இப்படி பொறுப்பற்ற நிலையில் தெருக்களில் கழிவுநீரை விடுவது ஈமான் கொண்ட முஸ்லிம்களுக்கு அழகல்ல! சதுக்கைத்தெரு வார்டு கவுன்சிலர் உடனே சம்பந்தப்பட்ட வீட்டாரிடம் எடுத்துச் சொல்லி இத்தகைய செயலை தடுத்து நிறுத்த வேண்டும்.
பாதசாரிகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் பெரும் இடையூறாக கழிவுநீரைத் தெருக்களில் விடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது! இதனால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாவதோடு விதவிதமான நோய்கள், காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது. தயவு செய்து அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
5. விரைவில் பழுதுப்பார்க்கப்படும் ... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[05 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26034
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சில வீடுகளில் கழிவுநீரை கட்டுப்படுத்தாமல் தெருக்களில் ஓடவிடுவது வாடிக்கையாகி வருகிறது.
வீட்டு கழிவுநீர் குழாய் உடைந்தால் அல்லது செப்டிக் டேங்க் உடைந்து கழிவு நீர் வெளியேறினால் அதை சரிசெய்து, பொது மக்களுக்கு துண்பம் தராமல் பாதுகாப்பது வீட்டின் சொந்தக்காரர் / வீட்டில் குடியிருப்போருடைய கடமை.
-----------------------------------
அதை அவர்கள் செய்ய தவறும் அல்லது மறுக்கும் பட்சத்தில் அந்த வார்டு உறுப்பினருடைய கடமையாகும். அந்த வார்டு உறுப்பினர் , வீட்டில் குடியிருப்பவரிடம் முறையிட்டு சரிப்படுத்தனும்.
அவர்கள் சரிசெய்ய தவறும் பட்சத்தில் வீட்டு உடமையாளர் மீது நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் நகர்மன்ற உறுப்பினர் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவை.
------------------------------------
வீட்டுக்காரரும் சரிசெய்யவில்லை, வார்டு உறுப்பினரும் கண்டுகொள்ள வில்லை என்றால், உங்களை போன்ற ஊடகங்கள்தான் படம் பிடித்துப்போட்டு, வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.
அதை நீங்கள் செய்திருக்கிறீகள் இன்ஷா அல்லாஹ்! விரைவில் அது பழுதுப்பார்க்கப்படும் என்பதை நம்புவோமாக.
7. Re:.ஊடகம் ஒரு மினி அரசாங்கம்!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[06 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26043
ஊடககங்களின் உண்மையான உள்நோக்கமில்லாத ஒத்துழைப்பானது, ஒரு மினிஅரசாங்கத்தின் வேலைக்கொப்பானது! ஆகவே ஊடகமே உனக்கு
எத்தொல்லைகள் வந்தாலும் அதை தூசிபோல் தூக்கிஎறிந்து விட்டு உன்தூயபணியைத் தொடர்ந்தாற்றிடு!
அன்பின் அந்த வார்டு உறுப்பினரே, இவ் விஷியத்தில் கவனம் கொண்டு நடவடிக்கை எடுப்பதோடு இனி வரும் காலங்களிலும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross