இன்று (மார்ச் 6; புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு தற்போது நடைபெற்று வருவதால் - மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என காயல்பட்டினம் மின்சார வாரிய அலுவலக பொறியாளர் தெரிவித்துள்ளார்.
1. பாராட்டுக்கள்....! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[06 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26036
பன்னிரண்டாம் வகுப்பிற்காகன அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மின்வாரிய பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படும் நேரத்தை மாற்றியும் குறைத்தும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள மின்வாரியத்திற்கு பாராட்டுக்கள்!
2. மின்தடை மோசடி ,,,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM )[06 March 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 26045
இந்த செய்தி தற்காலிக சந்தோசத்தை மக்களுக்கு அளித்திருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய அரசு சேவைகளில் செயலற்று போகி இருப்பது இந்த மின்சார வாரியமே என்றால் அது மிகையில்லை எனலாம்.
இந்த பராமரிப்பு என்று சொல்லி எடுக்கிற மின்தடையே ஒரு ஹம்பக் மோசடி எனலாம்.எதோ வெளிநாடுகளில் இருப்பது போல தொடர்ந்து மின்சாரம் தருவது போலவும்,அதனால் பராமறிப்பு செய்வதற்கு நேரம் கிடைக்காமல் இதை போன்று மின்தடை ஏற்படுத்தி செய்வதாக மக்களை ஏமாற்றுகிறது இந்த மின்சார வாரியம்.
நாட்டில் பதினாறு மணி நேரம் மின் தடை இருக்கும் பொழுதும் இதே பராமரிப்பு என்று மின் தடை செய்வதில் இருந்தே இது மகா மோசடி என்பதை உணர முடிகிறது. எனவே இவர்கள் நோக்கம் மின்தடை செய்வதுதான்,ஆனால் அதை பராமரிப்பு என்ற பெயரில் மக்களை அவதி படுத்திகிறார்கள் என்பது தான் உண்மை என்பது குறிப்பிடதக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross