பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழக லெட்டெர் பேடில் குறிப்பிடப்பட்டிருந்த அரசு பதிவு எண் 75/2009 குறித்த தகவல்கள் - மாநிலத்தில்
உள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலக பதிவுகளிலும் தேடப்பட்டது.
இதே எண்ணில் (75/2009) -
மத்திய சென்னை பதிவுத்துறை அலுவலகத்தில் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் - கிழக்கு தாம்பரம் என்ற
பெயரிலும்,
கோயம்புத்தூர் பதிவுத்துறை அலுவலகத்தில் கவுண்டம்பாளையம் லாரி ஓனர்ஸ் அசோசியேசன்ஸ் என்ற பெயரிலும்,
தூத்துக்குடி பதிவுத்துறை அலுவலகத்தில் ஊழல் எதிர்ப்பு மக்கள் பேரியக்கம், தூத்துக்குடி (ANTI CORRUPTION MASS MOVEMENT, THOOTHUKUDI) என்ற
பெயரிலும்,
இன்னும் பல மாவட்டங்களில், வெவ்வேறு பெயர்களிலும் பதிவுகள் காண முடிந்தது.
இந்த தேடலின் போது, 'இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம், திருநெல்வேலி' என்ற பெயரில் - அரசு பதிவு எண் 75/2009 மூலம், திருநெல்வேலி பத்திரப்பதிவு
துறை அலுவலகத்தில், ஜூலை 1, 2009 அன்று - 11 உறுப்பினர்களை கொண்டு சங்கம் ஒன்று பதிவு செய்யப்படிருந்தது தெரியவந்தது.
லெட்டெர் பேடில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிர்வாகிகளின் பெயர்களும் பதிவு ஆவணத்தில் இடம்பெற்றிருந்ததால் - இரண்டும் ஒரே அமைப்பு தான் என தெரிந்தது. அந்த
அமைப்பின் விலாசமாக - 29 பெருமாள் வடக்கு வீதி, திருநெல்வேலி சந்திப்பு, 627 001 - என்ற முகவரியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் - அமைப்பு பெயருடன் திருநெல்வேலி என்ற சொல்லும்
இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் - இவ்வமைப்பு, பொது மக்களிடம் கொண்டு சென்ற தனது ஏனைய ஆவணங்களில் (அடையாள அட்டை,
லெட்டெர் பேட், செய்திக்குறிப்புகள்) - தன்னை ஒரு அகில இந்திய அமைப்பாக வெளிப்படுத்திக்கொள்ள - தனது அதிகாரப்பூர்வ பெயரில் உள்ள
திருநெல்வேலி என்ற சொல்லை தவிர்த்து கொண்டுள்ளது தெரிகிறது.
தனது பதிவு அலுவலக முகவரியை மக்கள் தொடர்பு ஆவணங்களில் குறிப்பிடாத இந்த அமைப்பு - தனது தலைமை அலுவலகமாக சென்னை முகவரி ஒன்றையும், தேசிய அலுவலகமாக புது டில்லி முகவரி ஒன்றையும் - தனது லெட்டெர் பேடிலும், அடையாள அட்டையிலும் பயன்படுத்தி வந்துள்ளது.
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
|