காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில், பொதுத் தகவல் 3ஆவது மாத கலந்துரையாடல், இம்மாதம் 09ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் பிரதான வீதி - மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி எதிரிலுள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள ‘முத்துச்சுடர்’ மாத இதழ் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நூலகம் சென்று புத்தகங்கள், நாளிதழ்கள், வார - மாத இதழ்களைப் படித்து, அவை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, அதன் மூலம் படிப்பாற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வாய்ப்பேற்படுத்தும் நோக்குடன் இக்கலந்துரையாடல் நிகழ்ச்சி மாதந்தோறும் நடத்தப்படுவதாகவும், கலந்துகொள்ள வயது வரம்பில்லை என்றும், ஆர்வப்படும் அனைவரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றத்தின் அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆலோசகர்களான ஆசிரியர் மு.அப்துல் ரசாக், அரசு நூலகர் அ.முஜீப், வழக்கறிஞர் அமலன், வி.எம்.பாலமுருகன், கவிஞர் காஹிர் ஷேக் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். |