தாய்லாந்து அரசின் சார்பில், அந்நாட்டு தலைநகர் பாங்காக்கில் முவாங் தோன்ங் தானி என்ற பகுதியில் பாங்காக் நகை மற்றும் மாணிக்க 51ஆவது கண்காட்சி நடைபெற்றது.
26.02.2013 முதல் 02.03.2013 வரை நடைபெற்ற இக்கண்காட்சியில், உலகின் பல்வேறு நகை - மாணிக்க வணிகர்கள் தமது விற்பனையகத்தை அமைத்திருந்தனர். பலர் இக்கண்காட்சியில் கிடைக்கும் அரிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக பல நாடுகளிலிருந்தும் பயணித்து வந்திருந்தனர்.
இக்கண்காட்சியில், காயலர்களின் பாங்காக் ஜெம் ஹவுஸ், கே.டி.ஜெம் ஹவுஸ், ப்ரில்லியண்ட் ஜெம்ஸ் இன்டர்நேஷனல் கம்பெனி லிமிட்டெட் வாவு ஃபைன் ஜெம்ஸ் கம்பெனி லிமிட்டெட் ஆகிய வணிக நிறுவனங்கள் சார்பிலும் விற்பனையகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பாங்காக் ஜெம் ஹவுஸ் சார்பில் ஹாஜி வாவு ஷம்சுத்தீன், ஹாஜி வாவு உவைஸ், வாவு ஷாஹுல் ஹமீத், ஹாஜி வாவு எஸ்.எச்.மொகுதூம், வாவு எஸ்.மொகுதூம், வாவு யு.மொகுதூம், எம்.எஸ்.கே.காதிர் சுலைமான் ஆகியோர் விற்பனையகத்தை நடத்தினர்.
கே.டி.ஜெம் ஹவுஸ் சார்பில், ஹாஜி செய்யித் முஹம்மத், மவ்லவீ எம்.ஏ. ஷாதுலீ, ஹாஃபிழ் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஆகியோர் விற்பனையகத்தை நடத்தினர்.
ப்ரில்லியண்ட் ஜெம்ஸ் இன்டர்நேஷனல் கம்பெனி லிமிட்டெட் சார்பில், வாவு முஹம்மத் அலீ, வாவு காதிர் ஸாஹிப், வாவு ஃபைன் ஜெம்ஸ் சார்பில் வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத், வாவு எம்.எஸ்.ஜஃபருல்லாஹ், எம்.பி.ஷேக் அப்துல் காதிர், முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் தமது விற்பனையகத்தை நடத்தினர்.
சன் மூன் ஸடார் கம்பெனி லிமிட்டெட், ஜம்ஜம் ஜெம் ஹவுஸ், யானி ஜெம் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டன.
தகவல் & படங்கள்:
கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |