காயல்பட்டினத்தில் நேற்று (மார்ச் 05) நள்ளிரவு முதல் இதமாகவும், சில நேரங்களில் கனமாகவும் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் கனமழை பெய்ததையடுத்து நகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்றும் நள்ளிரவு முதல் மழைக்கான அறிகுறிகள் காணப்பட்டது. இன்று காலை 07.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை வானம் இருண்டே காணப்பட்டது. லேசான சாரல் மழை பெய்தது.
நண்பகல் 11.45 மணியளவில் திடீரென 5 மணித்துளிகள் இதமழை பெய்தது. அதற்குப் பின் வானம் மேகமூட்டம் எதுவுமின்றி தெளிவாகக் காணப்படுகிறது. நகரில் தற்போது வெயில் அடிக்கிறது.
இன்றைய சாரல் மழைக் காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் நகரின் வானிலை குறித்த தகவல்களை, www.kayalsky.com இணையதளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
தகவல் & படங்கள்:
காயல்பட்டினத்திலிருந்து...
ஹிஜாஸ் மைந்தன்
நமது செய்தியாளர்
3. அன்றைய நிகழ்வுகளை அசைபோடும்.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[06 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26051
அல்லாஹ்வின் உதவியால் என்றும் அழியாத எங்கள் அலியார் தெருவின் அழகை பார்த்து அகம் மகிழ்தேன்!
மழையுடன் கூடிய மந்தாரப்பொழுதில்,மனதிற்கு இதமூட்டும் தேநீரை சுவைத்து அருந்தும் அன்பு நண்பர் சாமு ஹாஜி அவர்கள் உட்பட அனைவர்களையும் பார்க்கும்பொழுது, பறந்து சென்று பங்குபெறமட்டோமா?என்ற ஏக்கம் எமைத்தூண்டுகிறது!
தெருவில் தென்படுபவர்கள் முதல் கண்ணில் காண்பவர்கள் அனைவர்களுக்கும் அனுதினமும் விடிகாலையிலிருந்தே தேநீர் விநியோகம் செய்து அவர்களுடன் தானும் அருந்தி அன்றைய பொழுதை அகமகிழுடன் ஆரம்பிக்கும் சாமுஹாஜி அவர்களை சரியாக இனம்பார்த்து படம் பிடித்திரிக்கிறதோ இந்த இணயதளம்?
4. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[06 March 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26052
தகவல் மற்றும் புகைப்படங்களுக்கு நன்றிகள், சகோ. ஹிஜாஸ் மைந்தன் அவர்களே.
ஊரின் நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டீர்கள்.. ஹூம்ம்..ம்.
அந்த இரண்டு ஆட்டு கமெண்ட்ஸ் சூப்பர். அதாவது
- "புல்லு வளந்தா நமக்கு தானே நல்லது? ஹூம் கொஞ்சம் பொறுத்திருப்போம்..." .
இந்த இரண்டு கிடாயையும் பார்த்து எனக்கு வந்த கமெண்ட்ஸ்...
" நீங்க இரண்டு பேரும் புல்லா வளர்ந்தா நமக்கு தானே நல்லது..? ஹூம் கொஞ்சம் பொறுத்திருப்போம்... பெரிய நாடான் கடைக்கோ, இஸ்மாயில் கறிக்கடைக்கோ வந்து தானே ஆகனும்..!! ".
6. Re:...பெரிய நெசவு தெருவின் நிலை posted byS.A.Shaik Mohamed. (Dubai (U.A.E))[06 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26057
எனது நண்பர்கள் நேற்று எங்கள் தெருவின் போட்டோவை அனுப்பி இருந்தார்கள். தெருவின் முக்கால் பகுதி தண்ணீர் கட்டி இருக்கிறது. நடக்ககூட முடியாதவாறு. ஒரே குண்டும் குழியும். ஊரின் நல்ல பகுதியை போட்டோ எடுத்த நண்பருக்கு ஒரு வழி பாதையின் அவல நிலையையும் போட்டு இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
7. Re:... posted byN.T.SULAIMAN (YANBU K.S.A.)[07 March 2013] IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 26059
ஆதம் சுல்தான் காகா உடைய ஆதங்கம் கிழக்கு பகுதியை காட்டவில்லை என்பது.நண்பர் ஹிஜாஸ் மைந்தன் எங்கள் கிழக்கு பகுதியை மிக அருமையாக படம் பிடித்து எங்களை குளிர வைத்து விட்டார்.
9. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[07 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26061
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கள் போட்டோ அனைத்தும் அருமை .....ஒரு சிறு நிமிடத்துக்கு முன்புதான் நான் எம் அருமை ''தமாம் '' நண்பர் ஹாஜி .மரைக்கார் அவர்களுடன் பேசி விட்டு ...போன பின்பு தான்.தாங்கள் போட்டோவை பதிவு செய்தீர்ரோ..... சும்மா தமாசு ......நான் நம் ஊரின் மழையின் அனுபவத்தை ...பல வருடங்கள் கழித்து இப்போது தான் அனுபவிக்கிறேன் .....செம ,,,சூப்பர்,,,,
ஆமா நேற்று காலையில் 9.00 மணி அளவில் கடுமையான மழை அல்லவா ....அடித்தது ....நான் அது சமையம் மோட்டர் பைக்கில் திருச்சந்தூர் சென்று கொண்டு இருந்தேன்....மலையில் புல்லாகவே நினைந்து ,வீரபாண்டிய பட்டணம் வரை கடும் மழை ......ரொம்பவும் கஷ்ட பட்டேன்.....தாங்கள் இதமான மழை என்று குறிபிட்டு உள்ளீர்கள்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross