பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
தலைமை அலுவலகம் முகவரியாக - 2/23, Nehru Street, Padikuppam, Chennai - 600 017 (600 107) என்றும்,
தேசிய அலுவலக முகவரியாக 202/2, Mehrauli, New Delhi - 110 036 என்றும்,
இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழக லெட்டெர் பேடில் இரண்டு முகவரிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தேசிய அலுவலக முகவரியாக குறிப்பிடப்பட்டிருந்த புது டில்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியின் பின்கோட், சென்னை விலாசத்தின்
பின் கோட் போல், லெட்டெர் பேடில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது (சரியான பின்கோட் 110 030).
இந்த முகவரி குறித்து - அந்த அமைப்பின் லெட்டெர் பேடில் அமைப்பின் சட்ட ஆலோசகர் என்றும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள, புது டில்லியில் உள்ள ராஜ் நாராயணனிடம் - வினவப்பட்டது. அந்த விலாசம் அவரின் நண்பர் விஷால் ஷர்மா என்பவரின் விலாசம் என்றும், அவருக்கும் அமைப்புக்கும் தற்போது தொடர்பில்லை என்றும் ராஜ் நாராயணன் கூறினார்.
மேலும் - அமைப்பின் செயலாளரான அப்துல் காதர் தனக்கு அறிமுகம் ஆனவர் என்றும், அவரின் வேண்டுகோளுக்கு இணங்கியே தான் அதற்கு ஆலோசகராக இருந்ததாகவும், இந்த அமைப்பின் அன்றாட செயல்பாடுகளில் தான் ஈடுபடுவதில்லை என்றும் கூறினார்.
சில பிரச்சனைகள் காரணமாக இந்த அமைப்பு பல மாதங்களாக செயல்பாட்டில் இல்லை என்றும், வேறு சிலர் இந்த அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி வரலாம் என்றும் ராஜ் நாராயணன் மேலும் கூறினார்.
தற்போது இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழக பெயரில் பயன்பாட்டில் உள்ள லெட்டெர் பேட் - இந்த அமைப்பின் செயலாளராக ஆல்வின் ரோட்ரிகோ என்பவரை குறிப்பிடுகிறது. அதே லெட்டெர் பேடில் அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் எனக்கூறப்படும் ராஜ் நாராயணன் - இந்த அமைப்பின் செயலாளராக அப்துல் காதர் என்பவரை குறிப்பிடுகிறார்.
இந்த அமைப்பின் உண்மையான நிர்வாகிகள் யார்? இது குறித்த அரசு ஆவணங்களில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் என பதிவாகியுள்ள நபர்கள் விபரத்தை காயல்பட்டணம்.காம் பெற்றது.
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
|