பெரிய நெசவு தெரு, தாயிம்பள்ளி முதல் ஐ.ஒ.பி. மற்றும் லெப்பை தம்பி சாலை பணிகளுக்கான டெண்டர் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. 28.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பணிகளை ஒப்பந்ததாரர்கள் எவரும் எடுக்காததால், இந்த பணிக்கான டெண்டர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளம்பரம் மார்ச் 6 அன்று மக்கள் குரல் / Trinity Mirror நாளிதழ்களில் வெளிவந்தது.
புதிய டெண்டர் தேதிகளாக, படிவங்கள் பெற மார்ச் 20 இறுதி தேதி என்றும், மார்ச் 21 டெண்டர் திறக்கப்படும் நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டுக்குளம் ஜல்லித்திரடு / மொட்டையன் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைத்து மழை நீர் வடிகால் அமைக்க 45.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல்:
ஐ.ஆபிதா சேக்,
நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
|