பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
அமைப்பின் உறுப்பினர்கள் சேர்க்கை எவ்வாறு நடந்தது?
<> மாநில பொறுப்பு ஒன்றுக்கு (3 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 5000, சில்வர் ஐ.டி. கார்ட்
<> மாவட்ட பொறுப்பு ஒன்றுக்கு (2 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 2000, சில்வர் ஐ.டி. கார்ட்
<> மாநகர பொறுப்பு ஒன்றுக்கு (3 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 2500, சில்வர் ஐ.டி. கார்ட்
<> வட்ட பொறுப்பு ஒன்றுக்கு (2 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 2500, பிளாஸ்டிக் ஐ.டி. கார்ட்
<> ஒன்றிய பொறுப்பு ஒன்றுக்கு (2 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 1000, பிளாஸ்டிக் ஐ.டி. கார்ட்
<> நகர பொறுப்பு ஒன்றுக்கு (2 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 500, பிளாஸ்டிக் ஐ.டி. கார்ட்
<> கிளை பொறுப்பு ஒன்றுக்கு (2 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 300, பிளாஸ்டிக் ஐ.டி. கார்ட்
<> வார்டு பொறுப்பு ஒன்றுக்கு (2 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 300, பிளாஸ்டிக் ஐ.டி. கார்ட்
<> உறுப்பினர் பொறுப்பு ஒன்றுக்கு (2 ஆண்டுகள்) கட்டணம் ரூபாய் 250, பிளாஸ்டிக் ஐ.டி. கார்ட்
இந்த அடிப்படையில் - ஒவ்வொருவரிடமும் - சேர்க்கை கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவைகளை தவிர கௌரவ பொறுப்புக்கள் என நிர்ணையம் செய்யப்பட்டு
அவைகளுக்கும் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
எத்தனை உறுப்பினர்கள் தான் இந்த அமைப்பில் சேர்ந்தார்கள் என காணும் முன் - வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பொறுப்புகளின் விபரத்தை
காண்போம்.
2009 ஆம் ஆண்டு நடந்த உலக மனித உரிமைகள் தின விழா நிகழ்ச்சி நிரல் பிரசுரத்தில் வெளியான பொறுப்பாளர்கள் விபரம்
...
2010 ஆம் ஆண்டு நடந்த உலக மனித உரிமைகள் தின விழா நிகழ்ச்சி நிரல் பிரசுரத்தில் வெளியான பொறுப்பாளர்கள் விபரம்
...
2011 ஆம் ஆண்டு தினமலர் நாளிதழில் வெளியான சில பொறுப்பாளர்கள் பெயர் ...
மேலே உள்ள இந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு / துண்டு பிரசுரங்களில் - பல பொறுப்பாளர்கள் பெயரை காண முடிந்தது. மாவட்ட தலைவர் என்றும், ஒன்றிய செயலாளர் என்றும், மகளிர் அணி செயலாளர் என்றும், இன்னும் பல பெயர்களில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டது.
வேடிக்கை என்னவென்றால் - பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு பொறுப்புக்களை பெற்ற இவர்கள், இந்த அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள் கூட அல்ல - அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி!
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
|