காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர இதர 17 உறுப்பினர்களும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) 08.03.2013 அன்று மனு அளித்துள்ளதாக, இன்றைய நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (தினத்தந்தி நாளிதழில் 9 உறுப்பினர்கள் மனு அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.)
11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் தலைமையில் மேற்படி உறுப்பினர்கள் மனு அளித்துள்ளதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
>> மன்றக் கூட்டம் தொடர்பான மினிட் புத்தகம் எழுதும்போது அரசு விதிகள் கடைப்பிடிக்கப் படுவதில்லை
>> பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதில்லை
>> கவுன்சிலர்களின் கருத்தைக் கேட்காமல் நகராட்சி தலைவர் தன்னிச்சையாகவே பல முடிவுகளை எடுத்து வருகிறார்
>> டெண்டர் விடுதல் உள்ளிட்ட பணிகளை யாரிடமும் கேட்காமல் செய்து வருகிறார்
>> முறையான ஆவணங்கள் இல்லாத பழைய வண்டிக்கு பகரமாக புதிய வண்டி வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும், பழைய வண்டிய பழுது பார்க்க அளித்துள்ளார்
>> நகராட்சி தலைவரால் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட மத நல்லிணக்க விழா அரசு அலுவலகத்தில் நடத்தப்பட்டதோடு, ஒரு லட்சம் ரூபாய் கணக்கில் காட்டாமல் செலவிடப்பட்டுள்ளது
>> பார்வையாளர்கள் என்ற போர்வையில் கூட்ட அரங்கிற்கு வந்து மோதலில் ஈடுபடும் நகர்மன்றத் தலைவரின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மனு அளிக்கப்பட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்யப்போவதாக நகர்மன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாளிதழ்களில் வெளியான செய்திகள் வருமாறு:-
1. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[09 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26113
வாக்கெடுப்பில் ஆபிதா அம்மையாரின் ஆட்சி தப்பும்.
ஆபிதா அம்மையாரின் ஆட்சியையும் சரி மத்தியில் ஆளும் மன்மோகன் சிங்க் (காங்கரஸ்) அரசும் ஒன்றே இன்னும் 3 ஆண்டுகாலம் நீடிக்கும்.
மத்திய அரசுக்கு கொடுக்காத கெடுபிடியா? நம்ம நகரச்சியில் நடந்துவிட்டது.
2. Re:... posted bysalai s nawas (singapore)[09 March 2013] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26115
அப்போ பெரியவர்கள் கொண்டு வந்த நம்பிக்கை உள்ள தீர்மானம், போச்சா? அவங்களே அவங்களுக்கு வாழ்த்து கொடுக்கும் போதே நெனச்சேன்.
மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தாச்சு. இப்போ நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) கொடுத்தாச்சு. இனிமல் போஸ்ட் ஆபீஸ் தான் பாக்கி, அங்கேயும் கொண்டு கொடுத்து லைன் லே நின்னு போட்டோ எடுங்க.
4. கண்ணுகளா அப்போ உங்க மனசுல இது தான் ஆசையோ? posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[09 March 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26119
மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவியை ஓரம் கட்ட நினைத்த எல்லாவருக்கும் பாராட்டுக்கள்.
கண்ணுகளா அப்போ உங்க மனசுல இது தான் ஆசையோ?
சரி நடக்கும் அல்லாஹு என்ன நாடியுள்ளானோ அதுவே நடக்கும். நீங்களும் சூழ்ச்சி செய்கிறீர்கள், அல்லாஹுவும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் அல்லாஹுவே மிகவும் சிறந்தவன்.
5. Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[09 March 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26120
சமீபத்தில்தான் பதின்மர் (பத்து பேர்) கொண்ட சமாதானக் குழு ஏற்படுத்தப்பட்டு, ஒற்றுமையுடன் நமதூருக்கு நல்லதை செய்யவேண்டும் என்ற அமர்வில் கையெழுத்து போட்ட பிரதியினை வலைத்தளத்தில் கண்ணுற்று மகிழ்வு கொண்டோம். நாளையும் ஒரு நல்ல நிகழ்வு நடைபெற இருக்கிறது. இப்படி இருக்க ....
ஏன் இந்த கொலைவெறி ???
6. Disgusting, Despicable posted byM.M. Seyed Ibrahim (Chennai)[09 March 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26121
போன வாரம் தானே எக்கச்சக்கமான மீட்டிங்க்ஸ் போட்டோம், நோட்டீஸ் விட்டோம், சமாதனம், மறப்போம், மன்னிப்போம் என்றெல்லாம் நாவினிக்க பேசினோம்.
இந்த இணையதளத்தின் தலையங்கம் தீர்க்கதரிசனமானது. சமாதன குழுவின் நோக்கமெல்லாம் சாக்கடை வாடை வெளியில் வரக்குடாது என்பதுதானே தவிர, சாக்கடையை சுத்தம் பண்னுவதல்ல என எண்ணத்தோன்றுகிறது.
7. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[09 March 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26122
மிக்க சந்தோசம்.
நாங்களும் இந்த 17 உறுப்பினர்களின் மனுவை ஆதரிக்கின்றோம். தலைவிமீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, தலைவியை பதவியைவிட்டு தூக்குங்கள்.
ஆனால், தலைவி மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் இது மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும். .
- ஊழல் செய்தார்.
- இந்த இந்த கான்ட்ராக்கட்டில் இவ்வளவு இவ்வளவு கமிசன் வாங்கினார்.
- இந்த இந்த வேலைகளை தன் சொந்தங்களுக்கு வழங்கினார்.
- ஊரை நாசம் செய்தார்.
- தவறு செய்பவர்களுக்கு உறுதுணை புரிந்தார்.
- குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நகராட்சியில் வேலை போட்டு தந்தார்.
-நகராட்சி சாமான்களை தன் வீட்டிற்கு எடுத்து சென்றார்.
-அதிகாரத்தை துர்பிரயோகம் செய்தார்
இப்படி ஏதாவது உருப்படியான குற்றச்சாட்டை கூறினால், நாங்கள் அனைவர்களும் உங்களுக்கு பின்னால் இருந்து ஆதரவு கொடுக்கின்றோம்.
அதை விட்டுவிட்டு....
சரிங்க, சமாதானக் குழுவில் கோரிக்கை மனுவை வாங்கிவிட்டு, 10 நாட்களுக்குள் பதில் கொடுப்பதாக சொன்னீர்களே..!! இது தான் பதிலோ. நல்ல மதிக்கின்றாங்கய்யா...!! உங்களை ஓட்டுப்போட்டு தெரிவு செய்த எங்களை ........... னும்
8. மெளனமே உன் பெயர் தான் சமாதான குழுவா ...? posted byமுத்துவாப்பா.... (al khobar)[09 March 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26123
10. நமதூரின் நசீபை நினைந்து நொந்தவனாக posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[09 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26126
இந்த செய்தியை படிக்கும் நான், முன்னர் சமாதான குழுவைப்பற்றி எழுதிய கமெண்ட் எனக்கு மறுபடியும் மதிற்குள்வந்து, மறுமுறையும் எழுது என்று ஏனோ தூண்டுவதால், மறுமுறையும் எழுதுகிறேன்,இடஞ்சலுக்கு மன்னிக்கவும்!
"அல்ஹம்திலில்லாஹ்! அருமையான முயற்சி இவ் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வித்தூன்றிய அனைத்து இதயங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்! நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்!
அருமையான சமாதான குழு ,பெருமைக்குறிய பல பெரியோர்கள்,கண்ணியமிகுபலபுண்ணியவான்கள், முழுபொலுதும் ஊர் நலனின் ஒரே எண்ணத்துடன் உலாவரும் ஊரின் முதுகெலும்புக்கொப்பான மனித புனிதர்கள் ஆகியோர்கள் அடங்கிய இக்கூட்டு குழு!.
இக்குழுவின் முயற்சியால்,இதுவரை இருந்து வந்த கசப்பு மிகுந்த காயலின் இருட்டு நீங்கி,இனிமேல் இதயம் குளிரும் இனிய பூபால இசைகலந்த புனர்காலைபொழுது புனித காயலில் புனரப்போகிறது,என்ற நம்பிக்கையை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு அனுபொலுதும் எதிபார்ப்போமாக!
ஊர் மக்களாலும்,ஒற்றுமை விரும்பிகளாலும் வரவேற்கும் இவ் ஒற்றுமை கூட்டுகுழுவினர்களே, உங்களுக்கு நல் யோசனை தருகிறோம் என்று நயவஞ்சக வார்த்தைகளுடன் சோற்று கட்டில் பெருச்சாலியை புதைத்து புனித மிகு பொக்கிஷம் என்று உங்களிடம் திணிக்க தந்திரமாக கங்கணம் கட்டிக்கொண்டு வரும் குறுக்குபுத்தி
குள்ளநரி குணத்தான்களை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாதீர்கள்,அவர்களை எல்லாம் இனம் கண்டு எடுத்தெறிந்து விடுங்கள்!
நேர்மையான எண்ணங்களுக்கும்,முயற்சிகளுக்கும் எல்லோர் மனம்குளிரும் வெற்றியை இறைவன் தந்தருள்வானாக ஆமீன்!
பதின்மர் சமாதானக் குழு கொடுத்த பரிந்துரைகள் என்ன ஆச்சு? காற்றில் பறந்து போயிடுத்து. ஊர் பெரியவர்களுக்கு என்ன மரியாதை?
வெளிநடப்பு என்றால் என்னவென்றே தெரியாத உறுப்பினர்களும் நமது நகர் மன்றத்தில் இருக்கிறார்கள் என்ற வேதனையான செய்தியையும் கேள்விப்பட்டேன். நகர் மன்ற தலைவி இவ்வளவு காலத்தில் எவ்வளவு லஞ்சம் வாங்கியிருக்கிறார், என எந்த உறுப்பினராவது சொல்லமுடியுமா?
இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
(1) தலைவி நகர்மன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யலாம்.
(2) அனைத்து ஜமாஅத்துக்களும் அவரவர் பகுதி நகரமன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்கள் உங்கள் வார்டுக்கு இது நாள் வரையில் என்ன திட்டங்கள் கொண்டுவந்து முடித்திருக்கிறார்? விசாரியுங்கள்.
அவர்மீது ஜமாஅத்தார்களுக்கு திருப்தி இல்லையென்றால் அவர்மீது நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து நகரமன்ற தலைவியிடமோ அல்லது நகராட்சி ஆணையிரடமோ மனுவாக கொடுக்கலாம்.
இனியும் ஐக்கியப் பேரவை நகர் மன்ற விஷயத்தில் மௌனம் சாதிக்காமல் நல்ல முடிவை எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
16. மக்களே! இது உங்கள் தருணம்! posted bySabeer (Bangalore)[09 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 26135
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை நீங்கள் 17 பேரும் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரியுள்ளீர்கள் என்றால் வார்டு உறுப்பினராக உங்கள் மேல் நம்பிக்கை வைத்து உங்களைத் தேர்ந்தெடுத்த நாங்கள் தற்போது நம்பிக்கை இழந்து உள்ளோமே. இதற்கு எங்கு போய் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது.
மனசாட்சியுடன் நடக்க வேண்டும். மக்களே! இது உங்கள் தருணம்! வெகுண்டெழுங்கள் அந்தந்த வார்டு பொறுப்பாளர்களே மக்களை ஒன்று திரட்டி இவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று பெரும்பாலானவர்களிடம் கையெழுத்து பெற்று ஆட்சியரிடம் சமர்ப்பியுங்கள். ஒரு முடிவு வரட்டும்!
சமாதானக்குழுவே உங்கள் குழுவின் ஒரு உறுப்பினரை நீங்கள் திருத்தாத வரையில் இவர்களை யாராலும் திருத்த முடியாது.
18. Re:...சட்டி சுட்டதடா...கை விட்டதடா posted bymackie noohuthambi (kayalpatnam)[09 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26138
சட்டி சுட்டதடா கை விட்டதடா...புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா...
சமாதானம் ஒரு கிலோ எவ்வளவு? கடையில் விற்குமா, தின்றால் தொண்டையில் விக்குமா...
10 பேர் கொண்ட சமாதான குழு ஏற்படுத்தி அதன் வரவை வரவேற்றும் விமர்சித்தும் பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கும்போது இடி இடித்து மழை பெய்து பந்தலை வேரோடு பிடுங்கி எறிந்த புயல் மாதிரி இப்படி ஒரு செய்தியா!
நகர்மன்றத்தை கூண்டோடு கலைத்து விட முடியாதா? சட்டத்தில் அப்படி ஒரு இடம் இருந்தால் பாருங்களேன்...கட்சிவாரியாக போட்டி போட்டு அடுத்த நாடகத்துக்கு மக்களை தயார் படுத்தலாமே...நாடகமே உலகம் நாளை நடப்பதை யார் அறிவார்?
20. 18 ல 1 னு தனியா நிக்குது... அட பாவமே... பிழைக்க தெரியாத மனுஷன்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[09 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26142
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது குற்றம் சுமத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நீங்கள்...!
உறுப்பினர்களாகிய உங்களுக்கு 13வது வார்டு உறுப்பினர் ஜனாப் ஹாஜி M.S.M. சம்சுதீன் அவர்கள் எங்களின் பக்கம் வந்து ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கலாமே... கோட்டை விட்டு விட்டீர்களே...! சரி இருக்கட்டும்... இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க போவது அல்ல.. அது வேறு விசியம் போகட்டும்...!
இனி அடுத்த மனு C M செல்லுக்கு நேரிலோ.. அல்லது உரை தபாலிலோ... அனுப்பும் போது மறவாமல் நான் மேலே குறிப்பிட்டதை போல் (ஜனாப் ஹாஜி M.S.M. சம்சுதீன் அவர்கள் உங்களுடன் ஒத்துழைப்பு இல்லாததை) சேர்த்து கொள்ளுங்கள்.... உங்களின் புகாருக்கு இன்னும் பலமாக இருக்கும்...!
நானும் பல தடவை என் மச்சானுக்கு இந்த 17 ளோடே 18 ஆ சேருங்கள் என்று கூறுகிறேன்.. மனுஷன் காது கொடுத்து கேட்க மறுக்கிறார்... வீனா போன மனுஷன்... ஆகையால் இவரையும் புகாரில் சேர்த்து எழுதி இவரின் பதவியை பிடுங்க முயற்சி எடுங்கள்... முதலில் சந்தோஷ படுபவன் நானாக தான் இருப்பேன்... புகார் கொடுத்து இருக்கும் உறுப்பினர்களே...! தயவு செய்து மறந்து விடவேண்டாம்....
21. Re:...வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்த கதை posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[09 March 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26143
வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்து விடுமோ என்ற பயம் தான் இந்த செய்தியை பார்க்க , படிக்க நேரும் போது உணர முடிகிறது .
நமது ஊரின் நல்லவர்கள் , பெரியவர்கள் , அனுபவசாலிகள் ஓன்று இணைந்து நமது ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் , நமது நகர மன்றத்தில் நல்ல ஒரு ஒற்றுமை உணர்வு தலைவர் மற்றும் உருபினர்களுக்குள் வர வேண்டும் என்று ஒரு சமாதான குழுவை ஆரம்பித்து, அதற்குரிய எல்லா முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அற்புதமான நேரத்தில் , இந்த உறுப்பினர்கள் இவ்வாறு நடந்து கொண்டது , உண்மையில் என்னை போன்ற
நடுநிலைவாதிகாளால் ஒத்து கொள்ள முடியவில்லை .
இந்த உறுப்பினர்கள் சமாதான குழுவிற்கு கொடுத்த மரியாதை இவ்வளவுதானா? நமது ஊரில் இனி எத்தனை சமாதான அமைப்புகள் வந்தாலும் நகரமன்ற தலைவர் & உறுப்பினர் இடையே சமாதனம் வருவது என்பது ஒரு பகல் கனவுதான் போல தெரிகிறது.
வல்ல நாயன் தான் இதெற்கு நல்ல ஒரு முடிவை தரவேண்டும் ,
அதற்காக நாம் அனைவரும் வல்ல நாயனிடம் துவா செய்வோம்.
22. நல்ல முடிவு (பயங்கர சிரிப்பு வருது....) posted byHAFIL AMEER (DUBAI)[09 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26144
அப்படி தலைவியை தூக்கிவிட்டால் நடக்கும் என்று நான் கருதும் ஒரு சில நல்ல காரியங்கள் கீழே....
ஒன்று மத்தும் நிச்சயம். தலைவி அவர்கள் நீங்கள் (நகர மன்ற உறுப்பினர்கள்) தேர்ந்தடுத்தவர்கள் இல்லை. மக்களின் பெருவாரியான ஓட்டும், அன்பும் பெற்றவர்கள். அவர்களை எதுவும் செய்ய முடியாது எனபது மட்டும் நிச்சயம்.
நகரமன்ற உறுப்பினர்களே!(13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கக்கா அவர்களை தவிர) உங்களுக்கு தைரியம் இருந்தால், (நகர மன்றம் கலைந்தால்..)இன்னொரு முறை நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு நின்று பாருங்கள், அப்புறம் புரியும், மக்கள் யார் என்று.
மக்களை முட்டாள்கள் என்று நினைத்தால் நீங்கள்தான் முட்டாள்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
23. ஊருக் உழைப்பவர்கள் ? posted byAbdul Wahid S. (Kayalpatnam)[09 March 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26145
இன்னொரு புனித யாத்திரை! மற்றுமொரு புண்ணியஸ்தலம்!!
குடிநீர், சாலை வசதி, மின்சாரம் இவைகள் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் மட்டுமல்ல ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணிகளாகும்.
இரண்டு மாதத்திற்கு முன் வரையில் நமதூரில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ஊர் மக்களுக்கு முறையாக தண்ணீர் கிடைக்க TWAD (Head office)க்கு நீர் கேட்டு நெடிய பயணம் மேற்கொண்டார்களா?
அரசு விதிப்படி சாலைகள் போடப்படாமல் கிடப்பில் பல வாரங்களாக இருந்த நிலையை எதிர்த்து சம்பந்தப்பட்ட வாரியத்தில் போய் மக்களுக்காக குரல் கொடுத்தார்களா ?
மின்சாரத்தைப் பொருத்தமட்டில் நம் ஊர் மட்டுமல்ல மொத்த தமிழ்நாடே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் மின்சார வாரியதிற்க்குப் போய் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு பண்ணவில்லை என்று மக்கள் குறை கூறமாட்டார்கள்.
ஆனால் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருளில் கிடந்தபோது இவர்கள் ஒன்று திரண்டு மின்வாரியத்தை அணுகி தெரு விளக்குகளை சரி செய்ய முன்வந்தார்களா?
கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் நலனைக் கருதி DCW வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் இவர்களில் பலர் கலந்து கொள்ளாமல் எங்கே சென்றார்கள்?
இந்த மாதிரி மக்கள் நலனை முன்னிறுத்தி எந்த காரியத்திலும் ஈடுபடாத இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட (இவர்களால் தேர்ந்தெடுக்கப்படாத) தலைவி மீது நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவர எந்த தார் மிக உரிமையும் இல்லை.
மாறாக மாதத்திற்கு ஒருமுறை நடை பெரும் நகராட்சி கூட்டத்தில் அடிக்கடி வெளிநடப்பு செய்யும் இவர்களுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி செய்வதற்கு இவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தார்மீக உரிமையுள்ளது.
25. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே..தன்னாலெ வெளிவரும் தயங்காதே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[09 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26147
ஒருவேளை உங்களின் இலட்சிய கனவான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறனும்னா சட்டப்படி இன்னும் ஒரு கூட்டம் கூடணும் அதுலெ உங்க மெஜாரிட்டியை காட்டணும். அட! ஒருவேளை அப்படியே நடந்துட்டாலும் அந்த அம்மா அதாங்க நம்ம சேர்மன் நியாயம் கேட்டு வழக்கு தொடரலாம். அதுக்கும் நீங்க தான் அல்லோலப்படுவீங்க..இபாடி பல சட்ட விதிமுறைகள் இருக்கு!
நீங்க எகிறுற எகிறுக்கு அந்த அம்மா அம்மாவின் கட்சியில் ஐக்கியமாயிட்டாங்கன்னா...ஐக்கியமா இருக்கிற நீங்க அய்யோ பாவம்ன்னு ஆயிடுவீங்க! அப்புறம் என்ன ஆப்போ அப்புதான். உங்களை எல்லாம் மெனக்கெட்டு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களாகியா எங்களைத்தான் சொல்லணும். என்னன்னு கேட்கிறீங்களா...? நாங்க கிறுக்கர்கள் என்று வேறென்னத்தெ சொல்ல...?
29. நீசர்களின் நாச வலை posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[09 March 2013] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26155
மாவட்ட ஆட்சி தலைவர் முதல் மதராஸ் பட்டணம் வரை படையெடுத்து புகார் பட்டியலை நீட்டி முக்கி முணங்கி முயற்சி பண்ணி, எள் முனையளவு கூட முடியாமல் மூக்குடைப்பட்டு மூலையில் முடங்கினாலும், எங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை எங்கள் முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும், எங்களை இயக்குபவரின் இறுதி உத்தரவு வரும் வரை!
நாளுக்கொரு நெருக்கடி பொழுதுக்கொரு புகார் என்று நித்தம், நித்தம் நீசர்கள் விரிக்கும் நாச வலையில் வீழ்ந்து விடாமல், தன்னை முறியடிக்கவரும் முகில்களைஎல்லாம் கிழித்துக்கொண்டு முழுமதியாய் வலம் வந்து வீறு நடை போட போகிறாள் வீர மங்கை !
அவ் வீறுநடையை காணத்துடிக்கும்!
முஹம்மது ஆதம் சுல்தான்
30. மக்கள் மனம் சஞ்சலப்படுகிறது.... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[09 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26157
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பத்து நபர்கள் கொண்ட சமாதான குழு ஏற்பட்டு , அவர்களால் பரிந்துரைகளும், செயல்முறைகளும் உருவாக்கப்பட்டு எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டது.
அதை அறிந்த மக்களில் பெரும்பாலோர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர் இனிமேல் நகராட்சியில் எந்தவித பிரச்சனைகளும் வராது. எல்லோரும் சுமுகமாக , ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் என்று.
-------------------------------
ஆனால் இன்று வந்திருக்கும் செய்தியை படித்ததும் மனதுக்கு வேதனையாக உள்ளது – மேலும் நம் மக்களுக்குள் ஒற்றுமையே வராதா – அல்லது வரக்கூடாது என்ற நோக்கில் யாரும் செயல்படுகிறார்களா என்ற சந்தேக எண்ணமும் உருவாகிறது.
ஒரு சமாதான குழு ஏற்படுத்தபட்டு , எல்லோரும் ஒற்றுமையாக இருக்க இசைந்தபின் அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கினால் நிச்சயமாக அல்லாஹ்! அவர்களை சும்மா விட மாட்டான். விரைவிலேயே அவர்களுக்கு மிகப் பெரிய சோதனையை கொடுப்பான்.
--------------------------------
1 + 1 + 17 = ஆக 19 பேர்களும் இதில் யார் தவறு செய்திருந்தாலும் அல்லது அவர்களை தவறு செய்ய தூண்டியிருந்தாலும் அதற்கு யாரும் துணை போயிருந்தாலும் அவர்களை அல்லாஹ்! பொருந்த மாட்டான்.
தனி ஒருவருக்கு இடையூறு ஏற்பட்டாலே அது சகித்துக்கொள்ளக் கூடிய செயலாகாது – ஒட்டு மொத்த ஊருக்கே இடையூறாக இருக்கும்போது நிச்சயமாக இறைவனின் கோபம் அவர்களின் மேல் விழும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை காலம் உண்டு – அந்த தவணை வரும்வரை விட்டுவைப்பான். அந்த தவனை வந்துவிட்டால் அவர்கள் ஒரு நிமிடம் முந்தவும் முடியாது பிந்தவும் முடியாது.
எனவே இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுவோர் – இறைவனை பயந்துக்கொள்ளட்டும்.
--------------------------------
19 பேர்களிலும் எவருக்கேனும் பணம், பதவி, பந்தா, புகழ் எதிலும் விருப்பம் இல்லை என்றால் இனிமேலும் அவர்கள் நகர்மன்ற அங்கத்தினராக இருப்பதில் அர்த்தமில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எப்படி எங்கள் இஷ்டப்படி பதவியை தூக்கி வீசிவிட்டு வரமுடியும் – மக்களின் வரிப்பணம் வீணாகுமல்லவா ? என்று , வீர வசனம் பேச வேண்டாம்.
இப்பொழுது நகர்மன்றத்தில் ஒன்றும் நடக்காமல் அல்லது நடக்கவிடாமல் அதிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்களே! அதிலேதான் மக்கள் பணம் வீணாகிறது – மக்கள் மனமும் சஞ்சலப்படுகிறது.
ஆகையால் உண்மையான மக்கள்சேவை மனப்பான்மை உடையவர்களாக இருப்பவர்கள் அதைவிட்டு வெளியே வாருங்கள் – அதுதான் மக்களுக்கும் நல்லது – உங்கள் கெளரவத்திற்கும் நல்லது.
31. ஒன்னு கூடிட்டாங்கயா,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[10 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 26158
காயல் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு நகர மன்ற பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்து வருவதை மக்கள் அவதானித்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு மக்கள் பிரச்சனையாவது, மண்ணாங்கட்டியாவது, விடிஞ்சா அடுத்த காயை எப்படி நகர்த்துவது என்று தலைவி கோஷ்டியும்,
மெம்பர் கோஷ்டியும் மண்டைய பிசிக்கிறாங்க.
போட்டி போட்டு புகார் கொடுக்குறாங்க. ஒன்னு ரெண்டு
மெம்பர் தலைவியை எதிர்த்தா பரவாயில்லை. ஒட்டு மொத்தமா ஒன்னு கூடிட்டாங்கலே என்ன நடக்க போகுதோ தெரியலங்க?மக்கள் விழி பிதுங்கி நிக்கிறாங்க. இதற்கு தீர்வு இல்லையா? நகர் மன்றத்தை அரசு கலைப்பதுதான் தீர்வா?
சமாதான குழுவின் பரிந்துரையை இரு அணியினரும் போடோக்கு நல்ல போஸ் கொடுத்து வாங்கிட்டு இப்படி போட்டு உடைக்கிறாங்களே என மக்கள் ஆதங்கம் அடைந்து உள்ளார்கள். இப்படியே போனா என்ன மக்கள் பனி நடக்கும்? மூன்று வருடங்கள் முடங்கி போகுமா? காலம்தான் பதில் சொல்லும்.
34. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[10 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26165
அஸ்ஸலாமு அலைக்கும்
என்ன சார் , இது .....நமது ஊர் நகர் மன்றதில் என்னதான் நடக்கிறது என்றே நம் ஊர் பொது மக்கள் அனைவர்களுக்கும் புரியாத ......புதிராகவே .....இந்த 1 3/ 4 வருசமாகவே இருந்து வருகிறது............வருடங்களும் ஓடி விட்டன....
ஆனால்.... ஓன்று மட்டும் நன்றாகவே பொது மக்களாகிய நமக்கு புரிகிறது ..... அதாவது .... இன்று நாள் வரையில் எந்த ஒரு நல்ல திட்டங்களும் நம் ஊருக்கு செயல் படுத்த படவில்லை என்பது மட்டும் நமக்கு நன்கு ..தெள்ள ,, தெளிவாக,, விளங்குகிறது.
இப்படியே நமது நகர் மன்றம் செயல் இழந்து கொண்டே போனால் ....நிச்சயமாக நமது வரிப்பணம் .....நமதூருக்கு பிரோசனம் இல்லாமல் போய் விடுமோ என்கிற பயமும் ++++ நமது வரி பணம் நம் பக்கத்து ஊர் நகர் மன்றத்துக்கு போய் அவர்கள் பயன் அடைவார்களோ ......என்கிற பயம் கூட நமக்கு ( வருகிறது ) மனதில் தோன்டுகிறது.....
இப்படியே போனால் .... இதற்க்கு விடிவும் ....முடிவும் ....எப்போது தான் வருமோ ????
நமதூர் பெரியவர்களால் சமாதான ஒற்றுமைக்கான ஒரு அமைப்பு ஏற்படுத்தி....( தலைவி & உறுப்பினர்கள் ) செயல் வடிவம் படுத்த கூடிய இந்த தருனத்தில் ....நமது கண்ணியத்துக்குரிய நகர் மன்ற உறுப்பினர்களின் இந்த செயல் சரியானது அல்ல என்றே தோன்டுகிறது .....அந்த சமாதான குழுவினர்கள் என்ன செய்ய போகிறார்கள் ....என்பதும் நமக்கு புதிராகவே உள்ளது.....
நாம் பார்த்து,, பார்த்து...தேர்வு செய்த நம் மரியாதைக்குரிய அனைத்து உறுப்பினர்களும் சரி ....நம் தலைவி அவர்களும் சரி ,,இப்படி விரோத போக்குடன் இருப்பதை நினைக்கும் போது...மேலும் நம் மனது தாங்க முடியாத வேதனை அடைகிறது . இப்படியே போனால் நம் ஊரின் நிலைமைதான் என்னா????
இவர்களின் ஒற்றுமையின் பக்கம் தான் நம் ஊரின் நலன் உள்ளது ..... வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
28/88.AMBALA MARICAR STREET
KAYAL PATNAM
9629654228
Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
இது புதிது அல்ல... இந்த நெருக்கடி கடந்த நகரமன்ற தலைவர் அவர்களுக்கும் மாவட்ட தலைமை - மாநில தலைமை அளவில் புகார் கொடுக்க பட்டது... இவர்களால் என்னத்தை சாதிக்க முடிந்தது...?
அன்றைய தலைவருக்கு - ஐக்கிய பேரவையின் வலுவான ஆதரவு பலம் இருந்தன...!
இன்றைய தலைவருக்கு - தனது சுய பலமே மூலதனம்...
இன்ஷா அல்லாஹ்.. காயல் நகரின் துணிச்சலான நகரமன்ற தலைவர் (வீர மங்கை) என்பதை நாளைய வரலாற்றில் தனது சாதனையை பதிய போவது உறுதி என்பதையே இந்த புகாருக்கு மேல் புகார் எடுத்து காட்டுகிறது...
36. சமாதான பேரவை ! ஒரு நாடக அரங்கேற்றம்... posted byHASBULLAH MACKIE (dubai)[10 March 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26168
சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள்!
ஆபிதா madam அவர்கள் பல உறுப்பினர்கள் மீது complaint கொடுத்து இருக்காங்க அதனால தான் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்... என்று உறுப்பினர்கள். என்ன ஒரு நடிப்பு அல்லது நாடகம் என்பது தெளிவாக தெரிகிறது....
சமாதான முயற்சி என்று ஊர் பெரியவர்களை கூட்டி ஒரு நிகழ்வை நடத்தி நாங்க தான் ஊர் பெரியவர்களை மதிக்கிறோம் , தலைவி ஊருக்கு எதிராக இருக்கின்றார்கள் என்பதற்கு முயற்சி வெற்றியளிக்கவில்லை... இவர்கள் எதிர் பார்த்தது நடக்கவில்லை...
உண்மையிலையே பெரியவர்களை மடித்து நடக்கின்ற உறுப்பினர்களாக இருந்தால் . ஏன் எல்லோரும் ஒன்று செண்டு complaint கொடுக்க வேண்டும்? அல்லாஹு எல்லோரின் அந்தரங்கங்களை அறிபவனாக இருக்கிறான்...
பேரவையின் இடைகால நிகழ்சிகளில் எல்லோரும் ஒற்றுமையாக அதன் தீர்மானங்களை ஏற்று கொண்ட விஷயத்தை இணையதளம் மூலம் அறிந்து கொண்டோம்... தலைவி மீது அதற்குல்லையே நம்பிக்கை இல்லா தீர்மானம்.. ?
உறுப்பினர்களுக்கும் , தலைவிக்கும் மத்தியில் பிரச்சினை ஏற்பட்டால் இந்த 10 பேர் கொண்ட குழுவிற்கு தெரியபடுத்தி
சமாதானத்தை ஏற்படுத்தலாம். என்று தானே முடிவு எடுக்கப்பட்டது... இது என்ன புதிராக இருக்கிறது?
ஐக்கியப்பெரவையின் தீர்மானங்கள் இந்த உறுப்பினர்களுக்கு ஒற்றுமையில்லை போலும்,? நாடகத்தை நன்றாகவே நடத்துகிறார்கள்...
அப்படியே நகர சபையை கலைத்து விட்டு தேர்தல் வேண்டாலும் இந்த உறுப்பினர்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு முகாந்திரமும் நேர்மையான வழியில் இல்லை...
இவர்கள் மறுமை நாள் உண்டு என்பதை மறந்து விட்டார்கள் போலும்....
37. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[10 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26169
இத்தனை ஆண்டு ஆண்டுகாலமாக நமதூர் நகர்ச்சியில் மறைமுகமாக, பெரியவரின் துணையுடன் லஞ்சம், ஊழல் செய்து கொண்டு காலம் தள்ளிய உறுப்பினர்கள், இன்று வழிதடமரி,தேர்தல் நேரத்தில் கண்ட கனவுகள் நினைவுக்கு தன்பக்கம் இருப்பதை கன்றுதான் இன் நிகழ்வு.
தமிழக முதல்வர் மாண்புமிக அம்மா அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை நகரமன்ற தலைவி ஆபிதா அம்மையாரை எதுவும் அசைக்க முடியாது.
புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மையார்க்கு கூட ஆபிதா அம்மையாரை ஏன் இந்த 17 உறுப்பினர்கள் நகரமன்றத்தை நடத்தவிடாமல் தடுக்க காரணம் எல்லாம் நன்கு அறியும்.
38. சமாதானக்குழுவின் அடுத்த நிலை என்ன? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[10 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26171
பெருமைக்குறிய பெரியவர்கள் அடங்கிய 10 பேர்கள் கொண்டசமாதானகுழு.கண்ணியமானவர்களும்,
நீதிவான்களும்,நடுநிலை நியாயமானவர்களும் அடங்கி இருக்கும் இந்தகுழுவின் அங்கீகாரம் அனைத்து ஜமாஅத் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,அந்த மேன்மைக்குறியவர்களின் ஆலோசனைகளையோ அறிவுரைகலையோ பெறாமல் தன்னிச்சியாக,அவர்களின் நிபந்தனைக்கு நேர்மாற்றமாக,அதிகாரபூர்வமாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அது தலைவியோஅல்லது உறுப்பினர்களாகவோ இருப்பார்களேயானால்,அவர்கள்மீது தார்மீக நடவடிக்கையை எடுக்கவேண்டும் இந்த சமாதானக்குழு!
அதில் எந்த தயக்கமும் இல்லாமல் காய்தல் உவத்தலின்றி, அவன் சொன்னான் இவன் சொன்னான் என்ற செவிவழி செய்திக்கு சிந்தையை செலுத்தாமல் அதிகாரப்பூர்வமான அத்தாட்சியுடன் கூடிய சான்றுகளை நீங்கள் பெருவீர்களேயானால், அச்சான்றுகலையே சாட்சியாக்கி உங்களை உதாசீனப்படுதியவர்களை ஊருக்கு அடயாளம் காட்டுங்கள்!
அவர்களுக்கு என்றைக்கும் எங்களின் ஒத்துழைப்பு இல்லை என்பதை இக்கமிட்டி நிரூபிக்குமேயானால், நாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் நீதியுடைய நியமானவர்கள் நீங்கள்தான் என்பதுமட்டும் யதார்த்தமல்ல
எங்கள் எல்லோர்களின் இதயத்திலும் என்றைக்கும் குடிஇருப்பீர்கள் இன்ஷாஅல்லாஹ்!
அன்புள்ள நகர் மன்ற உறுப்பினர்களே! நமது முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் அவர்கள் "இளைஞர்களே! கனவு காணுங்கள்" என்று சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். அவர் சொன்னது நமது நாட்டின் நன்மைக்காக "தொலை நோக்குடன்" கூடிய கனவை காணச் சொன்னார். ஆனால், நீங்களோ நகர் மன்ற தலைவரை "தொலைக்கும் நோக்குடன்" பகல் கனவு காண்கிறீர்கள். பகல் கனவு என்றுமே பலிக்காது.
உங்கள் பகுதிக்கு என்னென்ன திட்டங்களை கொண்டுவரலாம் என நல்ல கனவு காணுங்கள்.
நமது நகர் மன்றத் தலைவர் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நமதூரின் பெருவாரியான மக்களால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால், உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக நீங்கள் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது. ஆனால், உங்களை தேர்ந்தெடுத்த உங்கள் வார்டு மக்கள் உங்கள் நடவடிக்கைகளில் திருப்தி இல்லையெனில் உங்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம்.
நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக நடக்க அல்லாஹ் துணை புரிவான். ஆமீன்.
40. Re:... posted byஷேக் அப்துல் அப்துல் காதிர் (ரியாத் ச்வூதிஅரேபியா)[10 March 2013] IP: 5.*.*.* | Comment Reference Number: 26175
கனவுகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
இப்படி ஒருபாட்டு ஞாபகம்வருகிறது
ஆனால் ”பகல்கனவுகள் பலகோடி” அதை இப்போதுதான் கேட்கிறோம்.
என்னசெய்வது? எல்லாம் அந்த அறிவியலார் திரு.அப்துல்கலாம் செய்தவேலை, ங்.....க்...நற நற நற.................
ஆச்சியும், ஆச்சியும் ஆட்சியிலிருக்கும்போதே இப்படி ஒருஆட்டமா?
விதி யாரைவிட்டது, இந்தவிட்டத்துப்பூனைகள் தனக்கென ஒருவட்டம் வரைந்துகொண்டதோ,பால் புளித்ததோ?பல் இளித்ததோ,ஒரு சுண்டெலிகூட கிடைக்கவில்லை பாவம் என்ன செய்யும்? ஆமாம் பிறரின்பாவம் என்னசெய்யும்? மிகவிரைவில் பிரிவால் வாடப்போகும் நகராட்சி எனும் உங்களின் வசந்தமாளிகை குடிசையாகிவிடும் இன்ஷா அல்லாஹ் அப்பொதுதான் குடிசைகள் வசந்தமாளிகைளாகும்,
”எனக்கு நாடு என்ன செய்தது?என்றுகேட்காதீர்கள் நாட்டுக்கு நீங்களென்னசெய்தீர்கள்” (காந்தியடிகள்).தலைவிமீது தவறில்லாமல்,ஆதாரமில்லாமல் மனுகொடுத்திருக்கிறீர்களே? இது எப்படிப்பட்ட அறிவில் சேரும்?வானவில்லில் ஊஞ்சள் போட நினைக்கலாம் ஆனால் ஆடமுடியுமோ?
உங்களைப்பற்றியும்,உங்களது சேவைகளைப்பற்றியும் நாங்களும் மனுக்களைதயார் செய்துவிட்டோம், ஆனால் தனித்தனியாகக்கொடுப்பதா/பாதிக்கப்பட்டஎல்லோருசேர்ந்துபோய்கொடுப்பதா? நீங்களே ஒரு யோசனைசொல்லுங்களேன் ப்ளீஸ் சீக்கிரம் சொல்லுங்கள்.
41. Re:... posted byஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா)[10 March 2013] IP: 5.*.*.* | Comment Reference Number: 26177
அஸ்ஸலாமு அலிக்கும் ,
இறையருள் நிறைக
நகரத்தலைவி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் பிரார்த்தித்துக்கொள்கிறேன், இன்ஷா அல்லாஹ் வல்ல ரஹ்மான் உங்களுடைய முர்போக்கு சிந்தனைகளுக்கு என்றும் நாங்களும் நமதூர் மக்களும் துணையிருப்போம், தூய கரன்களோடு துனிச்சலா செயல்படுங்கள் தமிழகத்தை ஆளும் அம்மாவின் கட்சியில் இணைந்து அவருடைய துணையுடன் அவரைப்போல் நமதூரையும் நம்தமிழகத்தையும் நல்லதிட்டங்களை எல்லாநலவளங்களிலும் முதலிடத்திற்கு கொண்டுவர ம்னம்நைறைந்துவாழ்த்துகிறேன்.
43. Peace Prevail only ifthe root cause is addressed. posted byAbdul Wahid S. (Kayalpatnam)[10 March 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26186
கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு முன் நகராட்சி உறுப்பினர்களில்
ஒருவர் நகராட்சித் தலைவியிடம் தூதுவராக வந்துள்ளார். அவர் கொண்டுவந்த தூது....
" காக்காவுக்கு போன் போடுகிறேன் நீ பேசுமா, காக்க பேச்சைக் கேட்டு அவர்கள் சொன்ன மாதிரி செய்மா , (உனக்கு) எந்த பிரச்சனையும் வராது".
தலைவி அவர்கள் அந்த தூதை ஏற்க மறுத்துள்ளார்.
அதற்க்கு அந்த தூதுவர், "அப்படின்னா உன்மேல நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று நாங்கள் முடிவு பண்ணிவிட்டோம்".
தலைவியின் பதில். " பரவாயில்லை கொண்டு வாருங்கள்".
தூதுவரை அனுப்பியவர்கள் அவர்கள் வார்த்தையில் எவ்வளவு உண்மையானவர்கள் என்பது நிரூபித்துள்ளனர்.
So called சமாதானக் குழு கண்டுபிடித்த 4 காரணங்களில் எதற்கு (அடிப்படை) அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ (மூலக் காரணி) அதனை கண்டோகொல்லாமல் மேலோட்டமான காரணங்களை முன்னிலைப் படுத்தி தன்னுடைய பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.
It made a mistake by not addressing the root cause. "Sweeping under the carpet" hoping the the problem will be solved is not a right attitude.
Everyone knows what causes the current "Stalemate". But nobody comes forward to bell the cat. Certainly the so called "peace committee"
can not bell the cat for the very simple reason that the cat itself is one of the members of that committee.
Unless until the root cause is addressed properly, peace will not prevail.
----------------------
”எனக்கு நாடு என்ன செய்தது?என்றுகேட்காதீர்கள் நாட்டுக்கு நீங்களென்னசெய்தீர்கள்” (காந்தியடிகள்).
(C & P) - Comment Reference Number: 26175
மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகளை காந்தியடிகள் சொன்னதல்ல. முன்னாள் யு. எஸ். ஜனாதிபதி John F. Kennedy 1961 ஆண்டு தனது பதியேற்ப்பு விழாவில் சொன்ன வார்த்தைகள். ( Below are the words uttered by him)
".......Ask not what your country can do for you—ask what you can do for your country".
44. தகுதி அற்றவர்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[10 March 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26187
என்ன கருத்தை பதிவுசெய்வது என்பதறியாமல் விழி பிதிங்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு மக்கள் எழுதிய பிறகும் இதற்க்கு மேல் எழுத என்ன இருக்கிறது ? கொஞ்சமாவது சமூக அக்கறை இருந்தால் ஏதாவது புத்திமதி சொல்லி நல்வழிக்கு கொண்டு வரலாம். ஆனால் குறுக்கு புத்தியையே குறிக்கோளாக வைத்திருக்கும் இந்த கொள்கை திலங்கங்களை எப்படி நல்வழிப்படுத்துவது ?
சமாதான முயற்சி எடுத்த ஐக்கிய பேரவைக்கே பெப்பே காட்டிவிட்டு அவர்கள் கொடுத்துள்ள கெடு கூட முடியாத பட்சத்தில், யாரையும் மதிக்காது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துள்ளீர்களே ? உங்களுக்கு இன்னமும் இந்த ஊரில் தங்குவதற்கு என்ன தகுதிகள் மிச்சம் இருக்கிறது?
ஒருவேளை, மீண்டும் தேர்தல் வந்தால், வாக்காளப் பெருங்குடி மக்களே, இந்த துரதிருஷ்டமான சமபவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உங்கள் ஓட்டு உரிமைகளை நல்லவிதம் பயன்படுத்துங்கள். எல்லா வார்டிர்க்கும் தேர்தல் தான் ஒரு நல்ல தீர்வு. இனி ஒருமுகமாக தெரிவு செய்வது என்பதே இருக்கக்கூடாது.
45. சூழ்ச்சியாளர்களில் அல்லாஹுவே மிகவும் சிறந்தவன். posted bys.s.md meerasahib (kayalpatnam)[11 March 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26194
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் கண்மணிகளே....... கமாண்டு நம்பர் 33 சலாஹுதீன் (ஹாங்காங்) அவர்களின் சிந்தனையை வரவேற்கிறேன். அன்பு நண்பரே... நீங்கள் எழுதும்போது 25 கமாண்டுகள். இப்பொழுது 44.
அதுதாங்க..... காக்கையை அடிக்க யாராவது கையை அசைத்தால் போதும் எஸ்கேப்பாகிவிடும். ஆனால் கொக்கு அப்படி இல்லை அடி பட்டவுடன்தான் யோசிக்குமாம் யாரோ நமக்கு வச்சிட்டானுவோ ஆப்பு என்று. அதான் ஆதரவாளர்களின் கமாண்டுகள் பதியப்படவில்லை ஆதரவு என்றால்..... இந்த 17 பேருடையதல்ல. காயலில் ஒற்றுமையை பேன ஐக்கியபேரவை ஆதரவு.
நீங்களும் சூழ்ச்சி செய்கிறீர்கள், அல்லாஹுவும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் அல்லாஹுவே மிகவும் சிறந்தவன்.
ஒரு சிலர் சூழ்ச்சி செய்தார்கள் அன்று..... அல்லாஹ்வின் சூழ்ச்சியை இதோ அனுபவிக்கிறோம். வஸ்ஸலாம்.
அட்மின் அவர்களே...... இது விமர்சனம் அல்ல. மேலே காணும் கமாண்டுகளுக்கு வித்தியாசம். இதுவும் நமக்கு படிப்பினைதானே.....!!!
அஸ்ஸலாமு அலைக்கும்
இறையருள் நிறைக. கருத்துப்பகிர்வோர் அனைவருக்கும் இறைவன் அருளும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
சகோதரர் அப்துல் வாஹித் அவர்கள் எனது பதிவில் jaan ஃபிட் ஜெர்ரால்ட் கென்னடி (கென்னடிகள்) என்பதற்குப்பதிலாக காந்தியடிகள் என்று எழுதியிருந்தேன் அதைக்கண்டறிந்து திருத்தியிருந்தீர்கள் ஜஃஜாக்கல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்
நம்மிடம் அறிவும் புத்திசாலித்திறனும் மலிந்திருக்கிறது, இதைவைத்து தவறுகள் திருத்தப்படவேண்டும் என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு இறைவனுக்கே எல்லாப்புகழும்.
காந்தியடிகளோ/கென்னடிகளோ அவரவர் நாட்டிற்காக தன்னுயிரைத் தந்தவர்கள் இருவருமே சுட்டுக்கொல்லப்பட்டார்கள் அவர்கள் போகும்போது எந்தப்பிரதிபலனையும் கொண்டுபோகவில்லை, நல்லபெயரைத்தவிர,நாம் முன் வந்து உதவாவிட்டாலும் நமக்கு அரசால் வந்துகிடைக்கவேண்டிய நலன்களும், வளங்களும் தடைப்படவேண்டுமா ஒருசொல்தவறியது நீங்கள் திருத்தினீர்கள் இறைவன் மிகப்பெரியவன்,
ஆனால் வாய்ப்புகள் எப்போது வந்து தட்டுமென்று தெரியாது ஒரு சீதேவி நம் வாயிலில் வந்து தட்டிக்கொண்டு நிற்கிறது அதைத் தட்டிவிடாது தழுவிக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்
வாய்ப்புச்சக்கரம் இப்போது நம்மைநோக்கித்திரும்பியிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். திருத்தமுடியும் திருத்தப்படவேண்டும் ஒன்ருபட்டால் உண்டு வாழ்வு.
47. Re:.. posted byb.a.buhari (chennai)[11 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26200
எனக்கு ஒண்டு இப்பொழுது நீனைவுக்கு வருகின்றது கவுன்சிலர் ஒருவர் சொன்ன பதில் எந்த "குதிரை நன்கு ஓடுகின்றதோ அதன் மீது சவாரி செய்வதே புத்திசாலிதனம்" என்டு,
"தலையெங்கம்" சொல்வது போண்டு தான் kayalpatnam தின் தலை விதி அமையும் என்டு நான் நினைகின்றேன் , அல்லா நம் அனை வரியும் பாது காபனக ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross