பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
அமைப்பின் தலைவர் பொறுப்பில் துவக்கத்தில் இருந்து இருந்த எஸ்.
முத்தையாவை காயல்பட்டணம்.காம் தொடர்பு கொண்டது. டிசம்பர் 5, 2011 எழுதிய கடிதம் மூலம் தான் பதவி விலகியதை ஊர்ஜிதம் செய்த
முத்தையா, அமைப்பின் செயலாளர் எம்.அப்துல் காதர் குறித்து குற்றச்சாட்டுக்கள் பல வரவே, தானும், வேறு சிலரும் பதவி விலகியதாகவும்
மேலும் கூறினார்.
இந்த அமைப்பின் சென்னை முகவரி (2/23, நேரு தெரு, பாடிக்குப்பம், சென்னை - 600 107) - தனது உறவினர் மணி தேவர் என்பவரின் முகவரி
என்றும், கருத்து வேறுபாடுகள் துவங்கியவுடன் - அப்துல் காதர், சென்னை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக அவர் மேலும்
கூறினார்.
மேலும் - இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகத்தில் இருந்து விலகிய பிறகு - சில நிர்வாகிகளுடன் இணைந்து, தமிழ்நாடு சமூக சேவை
கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பு துவங்கி செயல்புரிந்து வருவதாகவும் முத்தையா கூறினார்.
அமைப்பின் செயலாளராக் இருந்த எம்.அப்துல் காதரை சில
வாரங்களுக்கு முன் காயல்பட்டணம்.காம் தொடர்புக்கொண்டது. இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம் தற்போது இல்லை என்றும், இந்தியன்
ஹுமன் வேல்பர்ஸ் & விஜிலன்ஸ் ஆர்கனைசேசன் என்ற பெயரில், வைதியலங்கம் என்பவரை தலைவராக கொண்டும், தன்னை பொது செயலாளராக
கொண்டும் புது அமைப்பு துவங்கி செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் - குற்றாலத்தில் டிசம்பர் 10 அன்று விழா நடத்தியதாகவும், இதில் மாவட்ட நீதிபதிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டதாகவும் அவர்
தெரிவித்தார்.
அரசு ஆவணங்கள்படி இந்த புது அமைப்பு ஏப்ரல் 19, 2012 அன்று, திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள தென்காசி மாவட்ட பத்திரப்பதிவு
அலுவலகத்தில், ஏழு உறுப்பினர்களை கொண்டு பதிவு (அரசு பதிவு எண் 27/2012) செய்யப்பட்டுள்ளது.
கீழே காணும் படம் - இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம் பெயரில் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
காலெண்டர். இதில் உள்ள நிர்வாகிகள் / பொறுப்பாளர்கள், யார் யார் எல்லாம் இணைந்து, புதிய அமைப்புகள் துவங்கினர் என்பது இதில்
விளக்கப்பட்டுள்ளது...
இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம் என்ற அமைப்பை துவங்கியவர்கள் தாங்கள் அதை விட்டு விலகவிட்டதாக தெரிவித்தப் பின்னரும், அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் சார்பாக பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிடப்பட்ட பின்னரும், இந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் / பொறுப்பாளர்கள் புதிதாக அமைப்புகளை துவங்கி செயல்பட துவங்கியப்பின்னரும், இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம் என்ற பெயரில் காயல்பட்டினத்தில் தொடர்ந்து இந்த அமைப்பின் லெட்டெர்பேடை ஒரு சிலர் பயன்படுத்தி வந்தது எப்படி?
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 13.3.2013/14:15] |