இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 66ஆவது நிறுவன நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பிறைக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
துவக்கத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயரில் செயல்பட்டு, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாளன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களால் துவக்கப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்தின் பேரியக்கமாக இன்று வரை இறையருளால் இயங்கி வருகிறது.
கட்சியின் நிறுவன நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் 10ஆம் நாளன்று, நாடு முழுவதிலுமுள்ள - கட்சியின் அனைத்து கிளைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பிறைக்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு சமுதாய விழிப்புணர்வூட்டப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், 10.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள - கட்சியின் அனைத்து கிளைப் பகுதிகளிலும் நேற்று பிறைக்கொடி ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி, எட்டையபுரம், கோவில்பட்டி, முத்தையாபுரம் உள்ளிட்ட - மாவட்டத்தின் வட பகுதிகளில், கட்சியின் மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அதுபோல, சாத்தான்குளம், கேம்பலாபாத், தெற்கு ஆத்தூர், வடக்கு ஆத்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் தலைமையில் பிறைக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான் குளத்தில், நேற்று மாலை 04.30 மணிக்கு பிறைக்கொடி ஏற்றப்பட்டது. சாத்தான்குளம் ஜமாஅத் தலைவர் ஹாஜி ஜமால் முஹம்மத் கொடியேற்றினார். மாவட்ட துணைத்தலைவர் மீராசா, சாத்தான்குளம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர் இஸ்மாஈல் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியை, சாத்தான்குளம் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லவீ ஐ.முஹம்மத் இஸ்ஹாக் ரஹ்மானீ துஆ ஓதி நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கேம்பலாபாத்தில் கொடியேற்றப்பட்டது. கட்சியின் நகர தலைரும், கேம்பலாபாத் ஊர் தலைவருமான எம்.பி.எம்.அப்துல் காதிர் பிறைக்கொடியேற்றினார். கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் விழிப்புணர்வுரையாற்றினார்.
கட்சியின் நகர செயலாளர் அபுல் ஹஸன், பொருளாளர் இ.அப்துல் காதிர், கேம்பலாபாத் ஜமாஅத் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஜமாஅத் அங்கத்தினரான பி.எம்.அப்துல் காதிர், எம்.எச்.முஹம்மத் ஆகியோரும், கேம்பலாபாத் நகர மாணவரணி சார்பில் பாதுஷா, இப்றாஹீம், நிளாமுத்தீன், முஹம்மத் இப்றாஹீம், யாஸிர், ஃபயாஸ், ஃபஹீம் அஹ்மத், சுல்தான் ஸாஹிப், கவ்ஸர், ஸமீர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, தெற்கு ஆத்தூரில் - கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கொடியேற்றினார். கட்சியின் தெற்கு ஆத்தூர் நகர தலைவர் எல்.இ.அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஐ.செய்யித் அப்பாஸ் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து வடக்கு ஆத்தூரிலும் பிறைக்கொடி ஏற்றப்பட்டது.
நிறைவாக, மாலை 06.30 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் பிறைக்கொடி ஏற்றப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் பிறைக்கொடி ஏற்றினார்.
ஜலாலிய்யா சங்கம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முனை, குலாம் ஸாஹிப் தம்பி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் நகர நிர்வாகிகளால் பிறைக்கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட நிர்வாகிகளான ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், முஹம்மத் முஹ்யித்தீன், பெத்தப்பா சுல்தான், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, எலக்ட்ரீஷியன் பஷீர், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |