நடப்பு கல்வியாண்டின் ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்றிடங்களைப் பெறும் தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவியருக்கு தன் சார்பில் விருந்துபசரிப்பு செய்யப்போவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழகத்தில் மேல்நிலை பொதுத் தேர்வுகள் (ப்ளஸ் 2) 01.03.2013 முதல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 6328 19,054 மாணவ-மாணவியர் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.
அதுபோல, இடைநிலை பொதுத் தேர்வுகள் (எஸ்.எஸ்.எல்.சி.) 27.03.2013 முதல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 24,873 மாணவ-மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் முகமாக, தற்போது நடைபெறுகிற / நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ-மாணவியர் அடைந்து சாதனை நிகழ்த்தினால், அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் விருந்துபசரிப்பு செய்து கவுரவப்படுத்தப்படுவார்கள்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளின் மாணவ-மாணவியர் தற்போதைய தேர்வுகளில் சிறப்பாக கவனம் செலுத்தி, மாநில அளவில் சாதனை எய்திட கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Administrator: செய்தி திருத்தப்பட்டது |