காயல்பட்டினம் நகராட்சி மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிடில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் அமைப்பான மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் மாவட்டக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமுமுக, மமக மாவட்ட மாதாந்திர கூட்டம், 10.03.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் நகர தலைவர் ஜாஹிர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அனைத்து வார்டுகளுக்கும் புதிய நிர்வாகிகள்:
காயல்பட்டினம் கிளை வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. காயல்பட்டினத்தில் 18 வார்டுகளுக்கும் புதிய நிர்வாகிகளை சேர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.
தீர்மானம் 2 - மே மாதத்தில் மருத்துவ முகாம்:
வரும் மே மாதத்தில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
தீர்மானம் 3 - நகரின் அனைத்து பகுதிகளிலும் கொடிக்கம்பம்:
காயல்பட்டினம் நகரின் அனைத்து பகுதிகளிலும் கொடிக்கம்பம் நட்டி, புதிய கொடிகளை ஏற்ற தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - நகர் முழுவதும் மக்கள் உரிமை பத்திரிக்கை வினியோகம்:
தமுமுகவின் மக்கள் உரிமை பத்திரிக்கையை காயல்பட்டினம் நகர் முழுவதும் வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 – நகராட்சி மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிடில் ஆர்ப்பாட்டம்:
காயல்பட்டினம் நகராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கருத்து ஒற்றுமை இல்லாமல், நகரத்தில் நகராட்சி பணிகள் ஒன்றும் நடைபெறாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் காயல்பட்டினம் நகராட்சியின் மீது கவனம் செலுத்த பணிகள் நடைபெற முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில், மமக சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தீர்மானம் 6 - தமிழக அரசுக்கு நன்றி:
காயல்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்கு நிதியொதுக்கிய தமிழக அரசுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவர் ஆஸாத், மமக மாவட்ட செயலாளர் பீரப்பா, நெய்னா முஹம்மத், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹ்ஸின், நகர தலைவர் ஜாஹிர், மமக செயலாளர் ஐதுரூஸ், தமுமுக நகர செயலாளர் ஃபிர்தவ்ஸ், நகர மருத்துவ அணி செயலாளர் முஜீப் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜாஹிர்
(நகர தலைவர், தமுமுக)
படங்கள்:
A.K.இம்ரான்
[படங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 14:07 / 13.03.2013] |