காயல்பட்டினம் தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ள சாலை முனையில், நீண்ட காலமாக அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்களால் சாலையோரங்களிலும், பள்ளிக்கூடத்திற்கு முன்பாகவும் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இது பலமுறை ஊடகங்களில் செய்திகளாகவும் வெளியிடப்பட்டது. அது மட்டுமின்றி, காயல்பட்டினம் நகராட்சியில் பலமுறை அப்பகுதியின் பொதுநல ஆர்வலர்களால் முறையிடப்பட்டு, நகராட்சியின் சார்பில் குப்பைகள் அவ்வப்போது அள்ளப்பட்டபோதிலும் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டது.
குப்பைகளை மக்கள் தரையில் கொட்டுவதைத் தவிர்த்திடுவதற்காக, நகராட்சியின் சார்பில் குப்பை சேகரிப்பு தள்ளுவண்டியொன்றும் அங்கு நிறுத்தப்பட்டது. எனினும், தள்ளுவண்டி வரை நடந்து சென்று குப்பையைக் கொட்ட மனமில்லாத மக்கள், தொலைவில் நின்றவாறே குப்பைகளை வீசியெறிந்து சென்றனர். பூனைகளும், எலி - பெருச்சாளிகளும் இக்குப்பைகளைக் கிளறுவது வழமையாகிவிட்டதால், சாலையோரங்களில் மனிதர்களால் வீசப்பட்ட குப்பைகள், விலங்குகளால் சாலை மீதே சிதறடிக்கப்பட்டது.
இவ்வளவும் நடந்த பிறகு பொறுமையிழந்த அப்பகுதியின் பொதுநல ஆர்வலர்கள், அவ்விடத்தின் குப்பைகளைத் துப்புரவு செய்யச் செய்துவிட்டு, அப்பகுதி சுவர்களில் எழுதியுள்ள அறிவிப்பு வாசகங்கள் வருமாறு:-
இந்த ஏற்பாட்டிற்குப் பிறகும், இதையறியாமல் “வழமை போல” அப்பகுதியில் குப்பை கொட்ட வரும் ஆண் - பெண்களுக்கு அப்பகுதியின் பொதுநல ஆர்வலர்கள் “வாயார வரவேற்பளித்து” வருகின்றனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்) |