இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கிளையின் அவசர செயற்குழுக் கூட்டம், 13.03.2013 புதன்கிழமையன்று இரவு 08.00 மணியளவில், மாவட்டத் தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர் தலைமையில், தூத்துக்குடி ஜெய்லானி தெருவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தார்.
இம்மாதம் 10ஆம் தேதியன்று - கட்சியின் நிறுவன நாளையொட்டி மாவட்டம் முழுக்க நடைபெற்ற பிறைக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் நிகழ்வுகள் குறித்து இக்கூட்டத்தில் மீளாய்வு செய்து, தீர்மானமியற்றப்பட்டது.
அத்துடன், வரும் ஏப்ரல் 02ஆம் தேதியன்று - முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்டகால முஸ்லிம் விசாரணைக் கைதிகளை கருணையடிப்படையில் விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுக்க அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் கவன ஈர்ப்புப் பேரணியின் ஓரங்கமாக, தூத்துக்குடியில் நடத்தப்படவிருக்கும் பேரணி ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மத் உவைஸ், தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் சஹாப்தீன், காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், கவுரவ தலைவர் ஹாஜி வாவு சித்தீக், தூத்துக்குடி மாநகர வர்த்தகரணி அமைப்பாளர் எஸ்.பி.முஹம்மத் அலீ பாஷா, மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உட்பட மாவட்ட – நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |