புதிய சாலை அமைப்பதற்காக, காயல்பட்டினம் ஆஸாத் தெரு – சித்தன் தெரு குறுக்குச் சாலை மீண்டும் தோண்டப்பட்டு வருகிறது.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை 07.03.2013 வியாழக்கிழமையன்றும், 08.03.2013 வெள்ளிக்கிழமையன்றும் ஆய்வு செய்தனர்..
07.03.2013 அன்று அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பிறகு ஆஸாத் தெரு சாலை முறைப்படி தோண்டப்பட்ட நிலையிலும், ஆஸாத் தெரு - சித்தன் தெரு குறுக்குச் சாலை முறைப்படி தோண்டப்படாதது குறித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் அதிகாரிகளை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று சுட்டிக்காட்டினர்.
அதன் தொடர்ச்சியாக, 13.03.2013 புதன்கிழமையன்று (நேற்று) ஆஸாத் தெரு - சித்தன் தெரு குறுக்குச் சாலை மீண்டும் தோண்டப்பட்டது.
அங்கு சாலை தோண்டப்பட்டபோது, பல வீடுகளின் முன்புறத்தில் சாலையின் ஓரப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டிகள் சில சேதத்திற்குள்ளானது.
இச்சாலையில், பெரும்பாலான வீடுகளின் கழிவுநீர் தொட்டிகள் சாலையின் ஓரப்பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |