காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (10.03.2013) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் அசைபட (வீடியோ) காட்சிகள் வருமாறு:-
நகராட்சி தலைவி ஆபிதா அம்மாவின் துடிப்பான சுறுசுறுப்பான சேவைகளுக்கு பக்கபலமாக இருக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி... நன்றி... இத்திட்டம் முழுமை பெற துவா செய்வோமாக...
2. Re:...அசைபட காட்சிகள் அசைந்து அசைந்து ஆடுகிறது!!! posted byAbdul Cader S.H. (Jeddah)[13 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26232
நல்லதொரு நிகழ்வினை அழகாக, நிழற்பட கருவி தனை நிலை நிறுத்தி பதிவு செய்யாமல் அசைபட காட்சிகள் அசைந்து அசைந்து ஆடுவது பார்பதற்கு சற்று எரிச்சலை தருகிறது. மேலும் ஒரே காட்சியை இரண்டு முறை பதிவேற்றம் செய்யபட்டு அதில் இரண்டாம் காட்சி ஊமையாக ஓடுகிறது. ஏன் இந்த குளறுபடி? இது போன்ற நிகழ்வுகளை இனி வரும்காலங்களில் நன்றாக தெரிந்த (professional video cameraman) நபரை வைத்து பதிவு செய்யுங்கள்.
3. குடிநீர் பஞ்சம் தீருமா? ,,,, posted byNIZAR (KAYALPATNAM)[13 March 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 26244
நகர தலைவியின் பேச்சின் அசைபடகாட்சிகள் அருமை.சில இடங்களில் ஆடியோ கட்டாகி உள்ளது.பத்து நாளைக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு தண்ணீர் வரும் இதுதான் பல ஆண்டுகளாக கோடையில் ஊரு மக்கள்படும் சொல்லன்னா துன்பம் என்றால் அது மிகையாகாது எனலாம்.
இந்த நிலைமையை மாற்ற இருக்கும் இரண்டாம் குடிநீர் திட்டம் நமக்கு ஒரு வரபிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த கூட்டத்தில் தலைவி உரை அணைத்து அம்சங்களும் உள்ளடக்கிய சிறப்பு பேச்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தன் சொந்த உறவினர்களின் நிலங்களையே கபாது செய்யும் இந்த காலத்தில் ஏக்கர் கணக்கில் தங்கள் சொந்த இடங்களை,
நிதியை மதம்,ஜாதி,என அனைத்தையும் கடந்து மக்களுக்
காக வழங்கிய நம் முன்னோர்களை அந்த தியாகசீலர்களை
நினைவு கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மறைந்தும் நற்கருமங்கள் செய்தமைக்காக நன்மை பெற்று கொண்டு இருக்கும் இந்த கனவான்களின் மறுமைவாழ்க்கை
சிறப்பாக அமைய இறையிடம் இறைஞ்சுவோம்.நம்
நினைவில் இந்த தியாகிகளை நினைவில் நிலை நிறுத்துவோம்.இந்த திட்டம் எந்த தடயமின்றி விரைவாக செயல்பட வாழ்த்துவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross