மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய இசைவு தெரிவித்தும், வெற்றிடமாக இருந்த துணைச் செயலாளர் பொறுப்புக்கு ஒருவரை நியமித்தும் அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் 08.03.2013 வெள்ளிக்கிழமை மாலையில், பொறியாளர் மக்பூல் அஹ்மத் இல்லத்தில் சிறப்புற நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
‘ஷிஃபா’வில் இணைய இசைவு:
காயல்பட்டினம் நகரிலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களின் மருத்துவ உதவிகளுக்காக புதிதாகத் துவக்கிட விவாதிக்கப்பட்டு வரும் ஷிஃபா (SHIFA) அமைப்பை அறிமுகப்படுத்தி பொறியாளர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன், பேசினார்.
அபூதபீ காயல் நல மன்றம் ‘ஷிஃபா’ அமைப்பில் சேர்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இறுதியில், ‘ஷிஃபா’வில் இணைவது என்றும், அதன் வருடாந்திர நிர்வாகச் செலவுக்காக தனது பங்களிப்பைச் செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அபூதபீ காயல் நல மன்றத்தின் ‘ஷிஃபா’ பிரதிநிதியாக, பொறியாளர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் தற்காலிகமாகச் செயல்படுவார் என்றும், ‘ஷிஃபா’ அமைப்பு உருப்பெற்றதும் - நிரந்தர பிரதிநிதியாக மன்றத்தில் உறுப்பினாராகவுள்ள மருத்துவர்களுள் ஒருவரை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
துணைச் செயலாளர் தேர்வு:
இதுவரை மன்றத்தின் துணைச் செயலாளராக சேவையாற்றி வந்த கட்டடக்கலை நிபுணர் எம்.ஜெ.ஹபீபுர்ரஹ்மான் தாயகம் சென்றுவிட்டதால், பொறியாளர் ஹுபைப் - மன்றத்தின் துணைச் செயலாளராக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என்று மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்தார்.
இறுதியாக, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பாக,
M.S.அப்துல் ஹமீத் |