பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம் சார்பாக மார்ச் 31, 2011 முடிய உறுப்பினர்கள் பட்டியல் அமைப்பு சார்பாக மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில, மாவட்ட, மாநகர, வட்ட, ஒன்றிய, நகர, வார்ட் வாரியாக உறுப்பினர்கள் சேர்ப்பு, இரு விழாக்கள், இவைகளுக்கு பின்னர் ... இவ்வமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்தது?
இவ்வமைப்பு 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட போது இருந்த எண்ணிக்கையான 11 உறுப்பினர்கள் என்ற அதே அளவில் தான் மார்ச் 31, 2011 முடிய உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளது என ஆவணங்கள், இந்த அமைப்பின் சார்பாக, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கள் வடிவமைக்கப்பட்டு, அவைகளுக்கு கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு, வசூலிக்கப்பட்ட பணம் ஆண்டு முடிவு கணக்கில் வந்ததா? அமைப்பு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆடிட்டர் ஒப்புதல் அளித்த கணக்கின் நகல் கீழே:
11 உறுப்பினர்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட சந்தா மூலம் வரவாக 1200 ரூபாயும், நன்கொடை மூலம் வரவாக 11,225 ரூபாயும் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய உறுப்பினர்கள் / பொறுப்பாளர்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட பணம்? கேள்விகள் ஒரு சிலரால் எழுப்பப்பட்டது.
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
|