பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
ஜூலை 1, 2009 அன்று துவக்கப்பட்ட இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம், திருநெல்வேலி - மாநிலம் முழுவதும் உறுப்பினர்களை
சேர்க்கத்துவங்கியது. மாநில, மாவட்ட, மாநகர, வட்ட, ஒன்றிய, நகர, வார்ட் வாரியாக பொறுப்புக்களும் சிலருக்கு வழங்கப்பட்டது.
இவ்வமைப்பு துவங்கப்பட்ட ஆண்டான 2009 ம் ஆண்டின் இறுதியில் - டிசம்பர் மாதம் 10 ம் தேதியன்று, உலக மனித உரிமைகள் தின விழா,
இவ்வமைப்பினரால் தென்காசியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் நகல் கீழே:
2009 ம் ஆண்டு - போன்றே 2010 ம் ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ம் தேதியன்று, உலக மனித உரிமைகள் தின விழா, இவ்வமைப்பினரால்
நடத்தப்பட்டது. இம்முறை - இந்நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் நகல் கீழே:
இரு ஆண்டுகளின் நிகழ்ச்சிகளிலும் அப்போதைய சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் போன்றோர் கலந்துக்கொள்வார்கள் என விளம்பரம்
செய்யப்பட்டிருந்தாலும், முக்கியப்பிரமுகர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை.
2010 ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி தொடர்பாக வெளியான சில துண்டு பிரசுரங்கள் - இந்த அமைப்பின் செயல்பாட்டினை புரிந்துக்கொள்ள உதவியாக
இருக்கும்.
துண்டு பிரசுரம் 1 ...
துண்டு பிரசுரம் 2 ...
முன்னரே சொன்னது போல் - இந்த இரண்டு துண்டு பிரசுரங்களும், ஒரே நேரத்தில், ஒரே நிகழ்ச்சிக்காக, பலரால் அடிக்கப்பட்டவை.
ஒரு துண்டு பிரசுரத்தில் - சென்னை மாநகர தலைவராக வீ. ஜானகிராமன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். சென்னை மாநகரச் செயலாளராக கே.எஸ். பீர் உசேன் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மற்றொரு துண்டு பிரசுரத்தில் - இந்த அமைப்பின் சென்னை மாநகர தலைவராக ஆர்.அன்பழகன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். சென்னை மாநகர
செயலாளராக எஸ்.சுரேஷ் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஒரே கால கட்டத்தில், ஒரே நிகழ்ச்சிக்காக அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் - ஒரே பொறுப்புக்கு, எப்படி இரு வேறு நபர்களை குறிப்பிடுகின்றன?
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |