வரும் கல்வியாண்டில் புதிதாகத் துவக்கப்படவுள்ள Wisdom Public School பள்ளியின் சார்பில் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி இம்மாதம் 03ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காட்டு மகுதூம் பள்ளியருகில் - செயின்ட் தாமஸ் பள்ளியின் எதிரிலுள்ள பள்ளியின் அமைவிடத்தில் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளியின் வருங்கால மாணவர் எம்.இஸ்மாஈல் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி ஆசிரியை ஹைருன்னிஸா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அறிமுகவுரையாற்றினார்.
அடுத்து, பள்ளியின் நோக்கம், வருங்கால திட்டங்கள், மாணவ-மாணவியர் சேர்க்கை விபரங்கள், பள்ளி கட்டமைப்பு, பாடத்திட்டங்கள், பாட நேரம், வாகன வசதி உள்ளிட்டவை குறித்து பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் விளக்கிப் பேசினார்.
பின்னர், புதிதாக பள்ளியில் சேர்க்கை அனுமதி பெற்றுள்ள மாணவ-மாணவியரின் பெற்றோர் கேட்ட சந்தேகங்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, நவீன ஸ்மார்ட் க்ளாஸ் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் முறை உட்பட பல அம்சங்கள் அசைபட விரிதிரை மூலம் பெற்றோருக்குக் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகள் நிறைவடையும் நேரத்தில் அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் கட்டுமானப் பணிகளை அனைத்து பெற்றோரும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் - இவ்வாண்டு சேர்க்கை அனுமதி பெற்றுள்ள மாணவ-மாணவியரின் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக, அலியார் தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை முனையிலுள்ள - பள்ளியை நிர்வகிக்கும் Vision Educational Trust
முனையிலிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
|