விவசாய வடிகால் நிலத்தில், டி.சி.டபிள்யு. ஆலையின் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், மாவட்ட ஆட்சியரிடம் நிலப் பட்டாக்களை ஒப்படைக்கப் போவதாக, காயல்பட்டினத்தையடுத்துள்ள ஆறுமுகநேரியில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
ஆறுமுகநேரியில், தாமிரபரணி தென்கால் நல்லூர் கீழக்குளம் நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்கக் கூட்டம், அமைப்பின் தலைவர் அ.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ்.ஜெயக்குமார் நிர்வாக குழு உறுப்பினர் எம்.தூசிமுத்து உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
ஆறுமுகநேரி எட்டுக்கண் பாலத்தில் தொடங்கி காயல்பட்டினம் கடற்கரை வரையில் தாமிரபரணி ஆற்று விவசாயத்தின் வடிகால் 400 ஏக்கரில் உள்ளது. இதில் 200 ஏக்கர் வடிகால் பாதையில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் மற்றும் அமிலக்கழிவுகளை கொட்டி டி.சி.டபிள்யூ தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
அணைக்கட்டு போல் அமைந்துள்ள மீதி 200 ஏக்கரில் அமிலக்கழிவுகள் 5 அடி உயரத்திற்கு தேங்கி படிந்துள்ளது. இந்நிலையில் வடிகால் முகத்துவாரத்தில் தடுப்பு அமைத்து எஞ்சிய நீர் கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாவிட்டால் ஆறுமுகநேரி பகுதியில் விவசாயம் செய்ய வாய்ப்பில்லாமல் ஆகிவிடும்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த மாதம் நேரில் வந்து ஆய்வு செய்த பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே வரும் 27ஆம் தேதிக்குள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் மறு தேதியில் எங்கள் விவசாய நில பட்டாக்களை மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைத்துவிட முடிவு செய்கிறோம்.
2. KEPA வீதிக்கு அழைத்தது... மக்கள் ஓன்று பட்டு செயல் பட்டோம் போராட்டம் வெற்றி பெற்றது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[08 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26103
இந்த சகோதரர்களின் ஆதங்கம்.. அவர்களின் பாதிப்பில் அவர்கள் உணர்கிறார்கள்...! அது போல தான் நமது நகரின் மக்களின் பாதிப்பை நாம் உணர்தோம்...! KEPA வீதிக்கு அழைத்தது... மக்கள் ஓன்று பட்டு செயல் பட்டோம் போராட்டம் வெற்றி பெற்றது... விரைவில்.. இன்சாஹ் அல்லாஹ் அணைத்து மக்களின் எதிர்ப்புடன் நல்ல செய்தி நமக்கு வரும்....
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமா...? இந்த DCW அமில தொழிற்சாலை சீரழித்து உள்ளது...? மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் - அமில தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தையும் மற்றும் எண்ணிகையில் அடங்காத மக்களின் (குழந்தைகள் உட்பட) புற்று நோயால் பாதிக்கபட்டு மரணத்தை தழுவவும் காரணமாக அல்லவா... இருக்கிறது...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross