பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
<> 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த விழாவிற்கு ரசீது புத்தகம் அச்சிட்டு வசூல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வரவில்லை என குற்றச்சாட்டு
<> உறுப்பினர் தொகை என பெற்றுக்கொண்டு உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
<> ஒரே பொறுப்பு பலருக்கு விற்பனை செய்யப்பட்டது என குற்றச்சாட்டு
<> சென்னையில் நடந்த விழாவிற்கு தன் சொந்த பணத்தை செலவு செய்த சென்னை மாநகர தலைவர் பதவி வழங்கப்பட்டவருக்கு 1,25,000 ரூபாய் - செலவு தொகையை வழங்காமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
<> அமைப்புக்கு என வங்கி கணக்கு துவக்காமல், செயலாளர் அப்துல் காதரின் சொந்தப்பெயரில் இருந்த வங்கி கணக்கில் (கனரா வங்கி, கடையநல்லூர் கிளை - கணக்கு எண். 0962101033129; இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கடையநல்லூர் கிளை - கணக்கு எண். 0916201000010057) அமைப்பு பணம் செலுத்தப்பட்டது என குற்றச்சாட்டு
இந்த குற்றச்சாட்டுகளில் - சிலவற்றை அடிப்படையாக கொண்டு, அமைப்பின் செயலாளர் எம்.அப்துல் காதர் மீது காவல் நிலையங்களில் புகார்களும், நிர்வாகிகளுக்கு வக்கீல் நோட்டீசும் சிலரால் கொடுக்கப்பட்டுள்ளது.
குற்றாசாட்டுகள் தொடர்ந்து வரவே - இந்த அமைப்பின் பொருளாளர் டி.காசிராஜன், 2.12.2011 தேதியிட்ட கடிதம் மூலம், தான் அமைப்பில் இருந்து விலகி கொள்வதாக - அமைப்பின் தலைவர் எஸ். முத்தையாவிற்கு கடிதம் எழுதினார்.
அமைப்பின் தலைவர் எஸ்.முத்தையா - தானும் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக, அமைப்பின் செயலாளருக்கு, 5.12.2011 தேதியிட்ட கடிதம் மூலம் தெரிவித்தார்.
28.12.2011 தினத்தந்தி நாளிதழிலும், இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக அமைப்பின் பெயரில் விளம்பரமும் வெளியிடப்பட்டது.
[தொடரும்]
பாகம் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
|