காயல்பட்டினத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் குறித்து, அது தொடர்பானவர்களுடன் கலந்தாலோசனை செய்து, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், பதின்மர் (பத்து பேர்) கொண்ட சமாதானக் குழு ஏற்படுத்தப்பட்டு, அக்குழு அனைத்து தரப்பினருடனும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது.
நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையில், சமாதானக் குழு பரிந்துரை ஒன்றையும் தயாரித்தளித்துள்ளதோடு பொதுமக்களின் பார்வைக்காகவும் இதுகுறித்து தகவலறிக்கை வெளியிட்டுள்ளது.
சமாதானக் குழுவின் பரிந்துரைக்கு பாராட்டு தெரிவித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டணம் சமாதான குழுவால் 27-02-2013 புதன் கிழமை அன்று ஜலாலியா நிகாஹ் அரங்கில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை படித்தறிந்தோம்.
சமாதான குழு எடுத்த கூட்டு முயற்சிக்கு, காயல்பட்டணம் முஸ்லீம் ஐக்கிய பேரவை பாராட்டுவதோடு முழு ஒத்துழைப்பையும் அளிப்போம் என மகிழ்வோடு தெரியத்தருகிறோம்.
நன்றி. வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |