Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:07:50 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10360
#KOTW10360
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 5, 2013
BSNL லேண்ட் லைன் சந்தாதாரர்கள் தமது மொபைல் எண்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3878 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் (பி.எஸ்.என்.எல்.) காயல்பட்டினம் கிளையின் கீழுள்ள தரைவழி தொலைபேசி இணைப்பு (லேண்ட் லைன்) உள்ளவர்கள் தமது கைபேசி (மொபைல்) எண்களை சமர்ப்பிக்குமாறு, பி.எஸ்.என்.எல். காயல்பட்டினம் கிளை அலுவலக துணைப் பொறியாளர் ஜெயக்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அன்பார்ந்த காயல்பட்டினம் வாடிக்கையாளர்களே!

வங்கிச் சேவைகளைப் போல, நமது பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி இணைப்பு (லேண்ட் லைன்) தொடர்பான விவரங்களை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் சந்தாதாரர்களாகிய உங்களுக்கு உடனுக்குடன் அறியத் தரும் பொருட்டு, உங்கள் கைபேசி (மொபைல்) எண் தேவைப்படுகிறது.

தங்களது மொபைல் எண்ணைக் கேட்டு, காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்திலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கையில், தங்களின் மொபைல் எண்ணை தெரிவிக்கலாம்.

அல்லது jeyakodi69@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது தரைவழி தொலைபேசி இணைப்பிலுள்ள
(1) (சந்தாதாரரின்) பெயர்,
(2) தொலைபேசி எண்,
(3) தாங்கள் சமர்ப்பிக்கும் மொபைல் எண்,
(4) அந்த மொபைல் எண் வைத்திருப்பவருக்கும், சந்தாதாரருக்கும் உள்ள உறவுமுறை
ஆகிய விபரங்களை அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இச்செய்தியைப் பார்ப்போர், பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வைத்திருக்கும் உங்களுக்கறிமுகமான அனைவரக்கும் சொல்லி, அவர்களது மொபைல் எண்களையும் சமர்ப்பிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் ஒத்துழைப்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.


இவ்வாறு, பி.எஸ்.என்.எல். காயல்பட்டினம் கிளை துணைப் பொறியாளர் ஜெயக்கொடி தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
ஹிஜாஸ் மைந்தன்
நமது செய்தியாளர்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 17:16 / 05.03.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்லதோர் சேவை நம் நன்மைக்காக...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [05 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26019

தரைவழி தொலை பேசி (லேண்ட் லைன்) வைத்திருப்பவர்கள் உடனே தங்கள் பொமைல் நம்பர்களை அலுவலகத்திற்கு தெரியபடுத்தும் போது அனைத்து வகையான தகவல்களும் உடனுக்குடன் தங்கள் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். BSNL வழங்கும் எத்தனையோ சலுகைகள் நம் மக்களுக்குச் சென்றடைவதில்லை! இது போன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் பயனடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இச் செய்தியை வெளியிட்ட இணையதளத்திற்கும் நன்றி!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [05 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26021

நமது ஊர் B.S.N.L.கிளை அலுவலக துணைப் பொறியாளர் MR.ஜெயக்கொடி சார் அவர்களின் கேட்டுக்கொண்டுள்ள இந்த வேண்டு கோள் நம் ஊர் B.S.N.L. சந்தாதாரர்கள் யாவர்களுக்கும் ரொம்பவும் அவசியமானது தான்.

B S.N.L. சந்தாதாரர்கள் இவர்களின் வேண்டு கோல்ளை பதிவு செய்வது நல்லது தான்.

குறிப்பாக...... MR.ஜெயக்கொடி சார் அவர்களின் செயல் பாட்டை நாம் மனதாரவே பாராட்டி ஆகணும்.நாம் யாதாவது ஓரு பிரச்சனை என்று சொன்னால் உடனேயே ( சுறு ,சுறுப்பாக ) அவரே முன்னின்று செயல் படுவார்.அவரின் பேச்சிலும் ஒரு அமைதியும் / மரியாதையும் நாம் பார்க்கலாம் .......நல்ல பண்புள்ளவர் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
28 / 88, AMBALA MARAIKAR STREET
NAINAR HOUSE KAYAL PATNAM
9629 6542 28


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26033

திரு ஜெயக்கொடி அவர்கள் தொலை நோக்கு பார்வை பாராட்டுக்குரியது .

தொலை தொடர்பு சாதனங்களின் அசுர வளர்ச்சியும் பிரமிப்பூட்டும் முன்னேற்றமும் நம்மை அதிர வைக்கின்றன. ஆனால் அரசு BSNL அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கி உள்ளதோ என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் உள்ளது.

IN THIS ONE DAY MATCH WORLD, THERE IS NO SECOND INNINGS. இந்த ஒருநாள் பந்தய யுகத்தில், இன்னும் சொல்லப்போனால் 20-20 யுகத்தில், இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதே இல்லை என்ற நிலையில் உலகம் படுபாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. தொலைபேசியை பின்னுக்கு தள்ளிவிட்டது அலைபேசி, அதை அப்புறப்படுத்தியது மடிக் கணினி. இப்போது அதையும் தூரப்போ என்று சொல்லி ஒரு நவீன ROBOISM தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டு வரும்போது, BSNL மிக சாதுரியத்துடன் தனது காய்களை நகர்த்தவேண்டும்.

திரு ஜெயக்கொடி அவர்கள் நமதூர் மக்களின் நாடி துடிப்பையும் வேகத்தையும் நன்கு அறிந்தவர்கள். அவர்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நமதூர் மக்களுக்கு அவர்கள் துரித சேவையை வழங்கி வருகிறார்கள் என்ற புள்ளி விவரங்களும் நமக்கு நம்பிக்கைதரும் செய்திகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்,,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [06 March 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26047

BSNL காயல்பட்டினம் கிளை லேன்ட்லைன் வாடிக்கையாளர் களுக்கு அறிமுகபடுத்தி உள்ள இந்த SMS சேவை வரவேற்பு குரியது.அரசு சேவை துறையில் தொலைதொடர்பு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.அதிலும் நம் ஊரு BSNL கிளை அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டினால் மக்களுக்கு ஏற்படும் தேவைகள் உடனுக்குடன் செயல்படுத்தபடுகிறது. தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மல நீர்...? (?!)  (5/3/2013) [Views - 2930; Comments - 7]
இன்றைய மழை காட்சிகள்!  (5/3/2013) [Views - 3336; Comments - 6]
நள்ளிரவு முதல் இதமழை!  (5/3/2013) [Views - 2094; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved