காயல்பட்டினத்தில் இன்று (மார்ச் 05) நள்ளிரவு முதல் இதமான மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் சாரலாய்த் துவங்கி, காலை 08.45 மணியளவில் கனமழையாக உருவெடுத்து, 09.50 மணி வரை பலத்த மழை பெய்தது.
இம்மழை காரணமாக நகரில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளி செல்வதற்கும், சாலையோர வணிகர்கள் வணிகம் செய்வதற்கும் சிரமப்பட்டனர். காலைப் பொழுதின் துவக்கத்திலேயே துவங்க வேண்டிய கட்டிடப் பணிகள் மழை காரணமாக முடங்கி, தாமதமாகத் துவங்கின.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் பெய்துள்ள இம்மழை காரணமாக நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. தற்போது மழைக்கான அடையாளங்கள் மறைந்து வெயில் துவங்கியுள்ளது.
காயல்பட்டினம் நகரின் வானிலை குறித்த தகவல்களை, www.kayalsky.com இணையதளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
தகவல் & படங்கள்:
காயல்பட்டினத்திலிருந்து...
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர். |