பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1 அன்று மாநிலம் முழுவதும் துவங்கியது. இத்தேர்வுகள் மார்ச் 27 வரை நடைபெறும்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வுகளை 19,054 மாணவர்கள் எழுதுகின்றனர்.
காயல்பட்டினத்தில் உள்ள 7 பள்ளிக்கூடங்கள் மூலம் 455 மாணவர்கள் இவ்வாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இவ்வாண்டு - முதல் முறையாக - எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 அரசு தேர்வுகளை சந்திக்கின்றது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 113 மாணவிகள் [கடந்த ஆண்டு - 133]
சுபைதா மேல்நிலைப்பள்ளி - 96 மாணவிகள் [கடந்த ஆண்டு - 98]
எல்.கே. மேல்நிலைப்பள்ளி - 88 மாணவர்கள் [கடந்த ஆண்டு - 92]
சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி - 80 மாணவர்கள் [கடந்த ஆண்டு - 75]
முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி - 32 (26 மாணவர்கள்; 6 மாணவிகள்) [கடந்த ஆண்டு - 40]
சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி - 24 மாணவிகள் [கடந்த ஆண்டு - 23]
எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி - 22 மாணவிகள் [கடந்த ஆண்டு - ---]
கடந்தாண்டு 461 மாணவர்கள், காயல்பட்டினத்தில் உள்ள 6 பள்ளிக்கூடங்கள் மூலம் அரசு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே. மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிஆகிய பள்ளிகளின் மாணவர்கள் எல்.கே. மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவியர் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர்.
தகவல் உதவி:
கே.எம்.டி. சுலைமான்,
நெய்னார் தெரு. |