யா அல்லாஹ் இதோ உன் அடியரை உன்னிடம் நாங்கள் ஒப்படைத்து விட்டோம்....... posted bySK Shameemul Islam (Chennai)[01 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25904
ஒரு காலம் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மறைந்த எங்கள் தெருவின் சீதேவியும் எங்களின் நெருங்கிய உறவினருமாகிய இந்த அம்மையார் பற்றித் தெரிய வேண்டுமாயின் இச்செய்தியில் தரப்பட்டுள்ள அவர்களின் மக்கள் செல்வங்களின் எண்ணிக்கையைச் சற்று கணக்கெடுங்கள்.
பிறகு அம்மக்களின் தற்போதைய நிலையை எண்ணிப்பாருங்கள்.
அனைவரும் இன்று நல்ல நிலையில் மிகுந்த மார்க்கப்பற்றோடு நிமிர்ந்து நிற்கும் பின்னணியில் இந்த அம்மையாரின் அர்ப்பணிப்பு உங்களுக்குப் புரியும்.
இச்சீதேவி எப்போதும் புன்முறுவலுடன் அனைவரையும் வரவேற்கும், உபசரிக்கும் விதம் வர்ணிக்க முடியாதவை.
இன்றைய காலத்தில் புதிய தம்பதிகள் இத்தனை பெற்றால் போதும் என இறைவனின் வாக்கையும் இறைத்தூதரின் போதனைகளையும் மறந்து திட்டமிடும் ஒரு வினோதமான சமூகம் மத்தியில், அதிக மக்கட் செல்வங்களைப் பெற்று ஒரு பெண்ணாக வீட்டில் அம்மக்களை உருவாக்கும் பணியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்ட இவர்கள் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு நல்வழிகாட்டுதல். அல்லாஹ் புகழுக்குரியவன்.
கடைசி வரை சுறுசுறுப்புடன் இருந்த இக்கண்மணி மரணிக்கும் முந்தைய தினம் வரை ஓதிக்கொண்டிருந்ததை அவர்கள் பிள்ளைகள் சொல்ல புல்லரித்துப்போனேன் நான்.
யா அல்லாஹ் இதோ உன் அடியரை உன்னிடம் நாங்கள் ஒப்படைத்து விட்டோம். உலகின் இவர்களது நல்வாழ்க்கைக்கு நங்கள் சாட்சிகள்.
யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து இவர்களுக்கு நீ அருள் பல புரிந்து மண்ணரையிலும் மறுமை வாழ்விலும் உன் உயர்வான தளங்களில் இவர்களை நீ அமர்த்துவாயாக. ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் இவர்களை பிரவேசிக்கச் செய்வாயாக.
இவர்களின் பிள்ளைகளுக்கும் பிரிவைத் தாங்கிடும் மன அமைதியைக் கொடுப்பாயாக.
இவர்களின் பெண்மக்களும் மருமகள்களும் இவர்களின் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு மார்க்கத்தை அடியொட்டி வாழும் மக்கட் செல்வங்களை உருவாக்கிட நீ கிருபை செய்வாயாக.
அனைவருக்கும் என் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
கண்ணீருடன்,
ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.
எஸ்.கே.குடும்பத்தார்கள்,
கொச்சியார் தெரு, காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross