செய்தி: நகர ஒற்றுமை குறித்து பதின்மர் சமாதானக் குழுவின் பரிந்துரை! நகர்மன்ற அங்கத்தினர், ஐக்கியப் பேரவை, ஊடகத்தினரிடம் கையளிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சரண் அடைவதும் ஒருவகை வியுகமே! posted bykavimagan.m.s.abdulkader (doha-qatar)[01 March 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25919
இந்தப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கான அடித்தளம் அமைத்த
தாய்ச்சபையின் ஊழியர்கள் சகோதரர்.அபூபக்கர்,வாவு.சம்சுதீன்
காக்கா மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி
மற்றும் வாழ்த்தினை பதிவு செய்கிறேன்.அல்லவை நீங்கி நல்லவை நடந்திட,நீங்கள் எடுத்திடும் இந்த முயற்சி வெற்றிபெற
பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
ஒரு பிரச்சனை உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்
அதன் மூல காரணி ஒன்று இருக்கும்.அதனை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உண்டு. ஒன்று,அதனை முற்றிலுமாக துடைத்து எறிவது.மற்றொன்று .அதனிடமே பரிபூரணமாக சரண்
அடைந்து விடுவது.இப்போது முன்னெடுத்துச் செல்லப்படுவது
இதில் இரண்டாவது ரகம் என்பதனை உணர முடிகிறது.எது,
எப்படியாயினும்,ஊர் நன்மைக்கு உங்கள் வியுகம் வித்திடுமானால் அனைவருக்கும் மகிழ்ச்சியே!
இங்கு இன்னொரு விஷயத்தை கவனத்தோடு பதிவு செய்வது
அவசியமான ஒன்று.சமாதான நடவடிக்கைகளை ஆதரிப்பது
போன்று படம் காட்டும் ஒரு கும்பல்,காழ்ப்புணர்ச்சியோடு
பல செய்திகளைப் பரப்பி வருகிறது.அந்த முகவரியற்ற முகங்களுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றை ஞாபகப்
படுத்த விரும்புகிறேன்.
தி.மு.க.திராவிட நாடு கேட்பதைக் கை
விட்டாலும்,அதனை கேட்டதற்கான காரணிகள் மட்டும் அப்படியே இருக்கிறது என்று சொன்னார்.அது போல,இந்த விஷயத்தில்,வெகு ஜன மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத ஒரு
குழு,புதிய அதிகார மையமாக உருவெடுத்து,தற்காலிக அமைதி
ஏற்பட்டாலும்,அதன் மூல காரணமான தனி நபர் நாட்டாமை
ஒடுக்கப் படும் வரை,கடந்த முறை,இந்த முறை போன்று அடுத்த
முறை தேர்ந்தெடுக்கப்படும் நகர்மன்றமும் இதே அவல நிலையை சந்திக்க நேரிடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross