தவிர்க்க முடியாத,தடுமாற்றம் இல்லாத தலையங்கம். நீதித்
தராசு சாயாமல் இருக்க,ஒரு பொறுப்புள்ள ஊடகம் செய்ய
வேண்டிய கடமையை,சரியான நேரத்தில் செய்துள்ள, உங்களுக்கு
எனது பாராட்டுக்கள்!
ஆரம்பம் முதலே ஒரு சிலர், இந்தத் தளம் ஐக்கியப் பேரவைக்கும்,
ஊர் ஒற்றுமைக்கும் எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த
முயன்ற போதெல்லாம்,அந்த மாய வலையில் சிக்காமல்,
உண்மையை,நேர்மையை நெஞ்சிலேந்தும் ஒரு பெருங்கூட்டம்
இந்தத் தளத்திற்கு அடித்தளமாய் அமைந்திருப்பது அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையே!
தனி மனிதர்களுக்கு ஊரின் மானத்தை அடகு வைப்பதும்,உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களின் மீது
முகவரி அற்றவர்களை வைத்து புழுதி வாரித் தூற்றுவதும்,
ஊழல் பெருச்சாளிகளுக்கு லாவண்யம் பாடுவதும்தான்
ஊர் ஒற்றுமையின் இலக்கணம் என்றால் என்னைப் போன்றவர்கள் இலக்கணப் பிழையாக இருக்கவே ஆசைப் படுவார்கள்.
நிறைவாக,விளைவுகள் என்னவாகவிருப்பினும்,தற்போதைய
தேவை சமாதானமே என்ற நல்லெண்ணத்துடன் களம்
இறங்கியுள்ள நல்லெண்ணம் கொண்ட பெரியவர்களுக்கும்,
சரியோ, தவறோ, இந்தத் தளத்தின் கருத்துக்களை, இங்கேயே
விமர்சிக்கும் நேர்மையும்,நெஞ்சுரமும் கொண்ட நண்பர்களுக்கும், எவ்வளவோ இழிவு படுத்தப்பட்ட போதும்
இந்த ஊரின் நன்மைக்காக ,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு
பணியாற்றும் தலைவி அவர்களுக்கும், எண்ணிக்கையால்
சிறிதான போதும் எண்ணத்தால் உயர்ந்து நிற்கும் அல்லாஹ்விற்குப் பயந்து பணியாற்றும் கவுன்சிலர்களுக்கும்,
தனி மனித விமர்சனங்களுக்கு அஞ்சாமல் ஊடக தர்மத்தை
முன்னெடுத்துச் செல்லும் காயல்பட்டணம்.காமின் சமூக
ஊழியர்களுக்கும் எனது மற்றும் எனது கருத்துடன் உடன்படும்
நண்பர்களின் பாராட்டுதலையும்,நன்றியையும் பதிவு செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross