செய்தி: மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஜனநாயக மாளிகை! posted bykavimagan (qatar)[07 March 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26069
அரசியல் பிரிவினை, கொள்கை கருத்து வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, படித்தவர்களின்
ஆதிக்கம், தனது ஜமாஅத்தின் மீது மட்டும் அதீத பாசவெறி,
இவற்றையெல்லாம் களைந்து ஒரு மன்றம் பேதமற்ற சமூக
சேவைக்காக உண்டாக்கப்படும்போதே அதன் ஜனநாயக
அடித்தளம் அமைக்கப்பட்டு விடும். அந்த அடித்தளத்தின்
மீது அழகாக கட்டப்பட்ட வீடுதான் மக்வாவின் தேர்தல்.
தேர்வானவர்களுக்கும், தேர்ந்து எடுத்தவர்களுக்கும் சம உரிமை
கொண்ட ஜனநாயக மாளிகையை கட்டி எழுப்பி இருக்கும்
மக்வாவிற்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும்,
தேர்ந்தெடுக்கப்படவில்லை எனினும் சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் களம் கண்ட வீரர்களுக்கும்,
அனைத்து உறுப்பினர்களுக்கும், தலைவர் - எனது பாசத்திற்குரிய காக்கா மஸ்ஊத் அவர்களுக்கும், ஹைதுரூஸ் ஆதில் அவர்களைப் போன்ற சமூகப் பணியாளர்களுக்கும், எனது
நல்வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.
வளைகுடா நாடுகளில் செயல்படும் எமது மன்றத்தில், இந்த
முறையை செயல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் இருப்பினும்,
உடனடியாக இல்லாவிட்டாலும் வருங்காலத்திலாவது
அல்லாஹ்வின் உதவியால் செயல்படுத்துவதற்கான சாத்தியக்
கூறுகளை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையை, எமது
மன்றத்தில் நான் எடுத்து வைப்பதற்கு மக்வாவின் இந்தத்
தேர்தல் முன்னோடியாக அமைந்துவிட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross