செய்தி: மார்ச் 03 அன்று, Wisdom Public School பள்ளி அமைவிடத்தில் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி! திரளான பெற்றோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Wisdom Freedom from Boredom posted bymackie noohuthambi (kayalpatnam)[08 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26100
நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு பொன் மாலை பொழுது இதமான கடல் காற்று நம் உள்ளங்களை வருடி சென்றது. கட்டி கொண்டிருக்கும் ஒரு பகுதி கட்டடத்தை வைத்து பள்ளிக்கூடம் இப்படிதான் அமையும் என்ற VISION பெரிதாக காட்டப்பட்டாலும், சந்தேகங்களுக்கு விளக்கமளித்தவர்கள் அந்த VISION ஓர் REALITY ஆகும் என்பதை அழுத்தமாக சொன்னார்கள். பாராட்டுக்கள்.
ஆனால் சில இடங்களில் பள்ளிக்கூடம் இங்கே வரும். தொழிற்சாலைகள் இங்கே வரும். தொழுகின்ற பள்ளி இதன் அருகில் வரும் என்று மாஸ்டர் பிளான் போட்டு அது கனவாக மாறியதும் உண்டு. நம்பிக்கைதான் வாழ்க்கை. எல்லோருக்கும் ஒரு திருப்தி.
அமில கழிவுகள், DCW என்ற ஒரு உயிர்கொல்லி ஏரியாவிலிருந்து நமது சிறார்களுக்கு விடுதலை. பேருந்துகள் அதன் ஒலி மாசுக்களிடமிருந்தும் இந்த பள்ளியை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை என்ற விரக்தியில் இருந்தும் நிரந்தர விடுதலை.
நிருவாகத்தினருக்கு நிறைய பொறுப்புக்கள் இருக்கிறது. தடைகளை தாண்டி, விமர்சனங்களை தாங்கி, பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். கூடிய விரைவில் எல்லா பணிகளும் செவ்வனே நிறைவேறி, பள்ளிகள் முறைபோல் ஆரம்பித்து, மக்கள் மார்க்க பக்தியுடன் இணைந்த கல்வி பெற்று சமூகத்தில் உயர் பதவிகளுக்கு செல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
ROME IS NOT BUILT IN A DAY பல பக்கங்கள் நிறைந்த காவியங்கள் வரி வரியாகத்தான் எழுதப்பட்டன.எனவே அவசர பட தேவை இல்லை. SLOW AND STEADY WINS THE RACE. . வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross