செய்தி: மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MKWA இன்னும் சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள்! posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[09 March 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26131
எல்லா புகழும் இறைவனுக்கே.
எமது MKWA வின் இந்த செய்தியை வாசித்த, கருத்துக்களை தெரிவித்த, மற்றும் MKWA வின் நலம் விரும்பும் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹுவின் அருள் உண்டாகட்டுமாக.
அதிகமானவர்களின் கருத்தும் இந்த ஜனநாயக தேர்தல் முறையை பாரட்டியவண்ணமே இருக்கிறது. புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே. இது போன்ற தேர்வையே மக்கள் விரும்புவதால் சாத்தியபடும் இடங்களிளெல்லாம் இதை நடைமுறை படுத்த அன்பான வேண்டுகோள்.
ஜனநாயக முறையிலான இந்த தேர்வில் தன்னார்வமாகவே செயல் படுவதர்க்காக, போட்டியிட்ட அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்களே. அனைவருமே செயற்குழு உறுப்பினர் ஆகுவது சாத்தியமில்லை என்பதால் அதில் இருந்து 15 நபர்கள் தேர்வாகி உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். அவர்களின் சேவையால் MKWA இன்னும் சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள்.
இந்த ஜனநாயக தேர்வில், வாசகர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தேர்தலை நடத்துவதற்காக அதற்க்கென்று உருவாக்கப்பட்ட (நான்கு பேர்கள் கொண்ட ஒரு குழு) தேர்தல் கமீஷன். அந்த தேர்தல் குழுவின் செயல்பாட்டிற்கு யாராலும் எந்த வித தலையீடும் இல்லாமல் அதை சுதந்திரமாகவே செயல்பட வைத்ததும் MKWA வின் தனி சிறப்பாகும்.
தேர்தல் பணிகளை மிகவும் சிறப்பாக செய்து முடித்த தேர்தல் கமீஷனையும் இந்த நல்ல வேலையில் மனமார பாராட்டுகிறேன்.
ஒரு சகோதரி MKWA வின் பெயரை மாற்ற கருத்து தெரிவித்துள்ளார்கள். உங்களின் ஆலோசனையை mkwa.clt@gmail.com என்ற முகவரிக்கு தெரிவிக்கலாமே.
இவர்களுக்கெல்லாம் வாக்குரிமையா? என்ற நியாயமான கேள்வியும் சிலருக்கு எழுகிறது. இந்த செய்தியை நன்றாக கவனித்து படித்தால் அதற்கான பதில் நிச்சயம் கிடைக்கும்.
மலபார் வாழ் காயலர்கள் என்பது தான் MKWA வின் உறுப்பினர் ஆகுவதற்கான அடிப்படை தகுதி. இதை வாசிக்கும், இந்த தகுதி உள்ள யார் வேண்டுமானாலும் உறுப்பினர் விண்ணப்ப படிவம் பெற்று முறைப்படி உறுப்பினர் ஆக அன்புடன் வேண்டுகிறது MKWAவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross