மக்கள் மனம் சஞ்சலப்படுகிறது.... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[09 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26157
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பத்து நபர்கள் கொண்ட சமாதான குழு ஏற்பட்டு , அவர்களால் பரிந்துரைகளும், செயல்முறைகளும் உருவாக்கப்பட்டு எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டது.
அதை அறிந்த மக்களில் பெரும்பாலோர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர் இனிமேல் நகராட்சியில் எந்தவித பிரச்சனைகளும் வராது. எல்லோரும் சுமுகமாக , ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் என்று.
-------------------------------
ஆனால் இன்று வந்திருக்கும் செய்தியை படித்ததும் மனதுக்கு வேதனையாக உள்ளது – மேலும் நம் மக்களுக்குள் ஒற்றுமையே வராதா – அல்லது வரக்கூடாது என்ற நோக்கில் யாரும் செயல்படுகிறார்களா என்ற சந்தேக எண்ணமும் உருவாகிறது.
ஒரு சமாதான குழு ஏற்படுத்தபட்டு , எல்லோரும் ஒற்றுமையாக இருக்க இசைந்தபின் அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கினால் நிச்சயமாக அல்லாஹ்! அவர்களை சும்மா விட மாட்டான். விரைவிலேயே அவர்களுக்கு மிகப் பெரிய சோதனையை கொடுப்பான்.
--------------------------------
1 + 1 + 17 = ஆக 19 பேர்களும் இதில் யார் தவறு செய்திருந்தாலும் அல்லது அவர்களை தவறு செய்ய தூண்டியிருந்தாலும் அதற்கு யாரும் துணை போயிருந்தாலும் அவர்களை அல்லாஹ்! பொருந்த மாட்டான்.
தனி ஒருவருக்கு இடையூறு ஏற்பட்டாலே அது சகித்துக்கொள்ளக் கூடிய செயலாகாது – ஒட்டு மொத்த ஊருக்கே இடையூறாக இருக்கும்போது நிச்சயமாக இறைவனின் கோபம் அவர்களின் மேல் விழும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை காலம் உண்டு – அந்த தவணை வரும்வரை விட்டுவைப்பான். அந்த தவனை வந்துவிட்டால் அவர்கள் ஒரு நிமிடம் முந்தவும் முடியாது பிந்தவும் முடியாது.
எனவே இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுவோர் – இறைவனை பயந்துக்கொள்ளட்டும்.
--------------------------------
19 பேர்களிலும் எவருக்கேனும் பணம், பதவி, பந்தா, புகழ் எதிலும் விருப்பம் இல்லை என்றால் இனிமேலும் அவர்கள் நகர்மன்ற அங்கத்தினராக இருப்பதில் அர்த்தமில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எப்படி எங்கள் இஷ்டப்படி பதவியை தூக்கி வீசிவிட்டு வரமுடியும் – மக்களின் வரிப்பணம் வீணாகுமல்லவா ? என்று , வீர வசனம் பேச வேண்டாம்.
இப்பொழுது நகர்மன்றத்தில் ஒன்றும் நடக்காமல் அல்லது நடக்கவிடாமல் அதிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்களே! அதிலேதான் மக்கள் பணம் வீணாகிறது – மக்கள் மனமும் சஞ்சலப்படுகிறது.
ஆகையால் உண்மையான மக்கள்சேவை மனப்பான்மை உடையவர்களாக இருப்பவர்கள் அதைவிட்டு வெளியே வாருங்கள் – அதுதான் மக்களுக்கும் நல்லது – உங்கள் கெளரவத்திற்கும் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross