செய்தி: இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அடிக்கல் நாட்டி சிறப்புரை! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டணமே! posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம்)[10 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26189
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழா மிக சிறப்பாக நடந்திருக்கிறது மகிழ்ச்சி – அல்ஹம்துலில்லாஹ்!
இந்த பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற்று, குறிப்பிட்ட காலத்தில் முடிந்து செயல்பாட்டிற்கு வர வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.
-------------------------------
ஒப்பந்தக்காரர் / நகராட்சிக்கு வேண்டுகோள் :
இந்த பணியை ஒப்புக்கொண்டிருக்கும் ஒப்பந்தக்காரரும் நமது நகராட்சி நிர்வாகமும் “ ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி , எல்லாம் சரியாக , முறையாக நடக்க வேண்டிய ஏற்பாடுகளை, முறைப்படி செய்து கண்காணித்து வாருங்கள் “ நீங்கள் கண்காணிக்க தவறினால் உங்களுக்குத்தான் நஷ்டமும் சிறமமும், சிக்கலும், ஏற்படும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
உதாரணத்திற்கு , ஆசாத் தெரு , சாலை போடும் விசயத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கையினால் மாத கணக்கில் ரோடு போடுவது தடை பெற்றிருப்பது போல் குடிநீர் திட்டம் வருடகணக்கில் தடைபட நேரிடும்.
காரணம் அங்கே ஊழல் எதிர்ப்பு இயக்கமும் , அந்த தெரு மக்களுமே வந்தனர். ஆனால் இங்கே ஊரில் உள்ள அத்தனை மன்றங்களும், அமைப்புகளும் , ஜமாஅத்களும் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் வருவார்கள் என்பதை நினைவுப்படுத்துகிறேன்.
மக்கள் எல்லோரும் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் – மேலும் மக்கள் முன்புபோல் இல்லாமல் இப்போது மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஆகவே எல்லாவற்றையும் முறையாக செய்து முடிக்க ஆயத்தமாகுங்கள்.
-------------------------------------
எழுத்துபிழை / ஆவணப் பெயர் பிழை :
அடிக்கல்நாட்டு விழாவில் பங்கு கொண்டோரின் பெயர்களை அந்த கல்லிலே பதிக்கிறார்கள் நாளைய மக்களுக்கு அந்த சரித்திரம் தெரிய வேண்டும் என்பதற்காக.
அப்படி சரித்திரத்தை சொல்லக்கூடிய அந்த கல்லில் பிழைகள் வரலாமா ? காயல்பட்டிணம் நகராட்சி என்று எழுதியிருக்கிறார்களே! காயல்பட்டணமா அல்லது காயல்பட்டினமா என்ற பட்டி மன்றத்திற்குள் செல்லவில்லை.
காயல்பட்டினம் என்று எழுத வேண்டும் என்றால் இரண்டு சுழி “ன“ தான் வரவேண்டும். காயல்பட்டணம் என்று எழுத வேண்டுமானால் மூன்று சுழி ”ண“ வர வேண்டும். இந்த மாதிரியான தவறுகள் அரசு ஆவணங்களில் வரக்கூடாது. அதுவும் சரித்திரம் சொல்லக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
--------------------------------------
காயல்பட்டணமே!
அடுத்து முக்கியமானது, தமிழக அரசு ஆவணங்களில் நமது ஊர் காயல்பட்டணம் என்றே உள்ளது காயல்பட்டினம் என்று அல்ல.
நகராட்சி இப்போது சமீப காலமாக இரண்டையும் உபயோகித்து வருகிறார்கள் – அது முறையாகாது எது அரசுடைய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதைத்தான் உபயோகிக்க வேண்டும்.
இப்பொழுது நடந்த விழாவிற்கு அருகில் உள்ள, 1955 இல் குடி தண்ணீர் திறந்து வைக்கப்பட்டபோது வைத்திருக்கும் கல்லை பாருங்கள் “ காயல்பட்டணம் “ என்றே இருக்கும்.
நமது இரயில்வே ஸ்டேஷனில் மட்டுமே காயல்பட்டினம் ( புதிதாக வைத்த போர்டில் காயல்பட்டிணம் என்று ” ண “ போட்டிருக்கிறார்கள்) என்று இருக்கும்.
ஆகையால் நமது ஊரின் பெயர் காயல்பட்டணம் தான் , நமது முன்னோர்களும் காயல்பட்டணம் என்றே அழைத்து வந்திருக்கிறார்கள். எனவே, மக்களும் அந்த பெயரை மாற்றாமல் இருப்பதே சிறந்தது. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross