செய்தி: மருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய ஒப்புதல்! பள்ளிக் கல்வியுடன் மத்ரஸா கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இவ்வாண்டு முதல் இலவச சீருடை!! கத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கத்தர் காயல் நலமான்றம் posted bymackie noohuthambi (kayalpatnam)[11 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26196
"இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" என்று வள்ளுவம் கூறுகிறது.
மருத்துவ துறையில் கால் பதித்துள்ள ஷிபா அதன் நதிமூலம் நிதிமூலம் ரிஷிமூலம் எது என்பது தெரியாவிட்டாலும் எங்கோ இருந்து கொண்டு எங்கோ அதன் தலைமை அமைந்துகொண்டு நமது இக்ரா கல்வி சங்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுரை கூறிக் கொண்டு உதவிகள் செய்து கொண்டு இருக்கும் இந்த அமைப்ப்புக்கு தோள் கொடுக்க கத்தர் காயல் நலமன்றம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
பள்ளி சீருடைகள் வழங்குவதில் ஏழை என்ன பணக்காரன் என்ன, UNIFORM என்று வரும் போது அதற்கான உதவியும் UNIFORM ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான் கருத்து." இலவசங்கள்" எல்லா சமுதாயத்திலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நான் படிக்கும் காலத்தில் "லெப்பை" என்ற ஒரு சாரார் இஸ்லாத்தில் இனம் காணப்பட்டு அவர்கள் அரசின் மான்யம் பெற தகுதி உடையவர்களாக ஆக்கப்பட்டது. அதன் விளைவு நூஹு தம்பி லெப்பை என்ற ஆலிம்சா மகன் நானும் பல்லாக் லெப்பை என்ற கோடீஸ்வரன் மகன் எனது நண்பனும் அந்த மானியத்தை பெற்றோம்.
ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்றார் கலைஞர். அப்படியானால் மக்கள் என்றும் ஏழைகளாகவே இருக்கவேண்டும் கலைஞர் ஆசைப் படுகிறாரா என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் கேட்டார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு இலவசத்துக்கு "விலையில்லா" என்ற ஒரு புதிய பரிணாமம் கொடுத்து இலவசத்தை தொடர்கிறார்கள்.
இலவசத்துக்கும் தர்மத்துக்கும் இடையே என்ன வேறுபாடு என்பதை இஸ்லாம் எப்படி சொல்கிறது என்பதை இந்த மன்றம் கற்றறிந்த உலமாக்கள் இடம் கேட்டறிந்து அதன்படி செய்தால் அல்லாஹ்வின் அருளும் நபிகள் நாயகம் அவர்கள் நல்லாசியும் நம் அனைவர்மீதும் குறிப்பாக இந்த காயல் நலமன்ற உறுப்பினர்கள் மீதும் உண்டாகும்.
குறைகாண வில்லை, நிறையாக செய்ய சொல்கிறேன். மாற்றி யோசிக்க உங்களை அழைக்கிறேன். மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது. மற்றெல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டவையே, தீர்ப்புகள் கூட திருத்தி எழுதப்படலாம். தர்மம் களா கத்ரையும் கூட மாற்றி விடுகிறது என்று நம்மவர்கள் சொல்வதில்லையா. ASSSADAQATHU RADDHUL BALAA VA QALAA என்று நபி மொழி இருப்பதாகவும் அறிகிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன். வாழ்த்துக்கள்.. .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross