வேண்டுகோள் : posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[11 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2624
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கடல் நீர் மற்றும் காற்று சோதனை செய்து முடித்தாகிவிட்டது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்து மொபைல் டவர் மூலமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கண்டறிய சோதனை செய்ய இருப்பதும், அதற்குண்டான செலவினங்களை பற்றிய விவரங்களையும் அறிவித்திருக்கிறீர்கள்.
இன்ஷா அல்லாஹ்! நமது மக்கள் அதற்குரிய செலவினங்களை வாரி வழங்குவார்கள். நீங்களும் உங்கள் முயற்சிகளை தொய்வு இல்லாமல் தொடர்ந்து செய்து வெற்றியும் பெறலாம்.
------------------------------------------------
சகோதர , சகோதரிகளே !
பொதுவாக உலகம் முழுவதும் புற்று நோயின் தாக்கம் இருந்தாலும் , நமது ஊரிலே அதன் பாதிப்பினால் நிறைய உயிர்களை இழக்கிறோம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!.
ஒவ்வோர் உயிருக்கும் இறப்பு என்பது விதியாக்கப்பட்டதுதான் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் புற்று நோய் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு, மிகுந்த நோவினையுடன், சொந்த பந்தங்களும் வேதனையடைந்து மரணம் அடைவதைத்தான் பொறுக்க முடியவில்லை.
புற்று நோய் அல்லது அந்த மாதிரியான ஒரு கொடிய நோய் நம் ஊர் மக்களுக்கு ஏற்பட என்ன காரணம்? என்பதை கண்டறிந்து அது நம் மக்களை இறைவனருளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டிதான் CFFC பல வழிகளிலே முயற்சி செய்கிறது.
எனவே அதன் செலவினங்களுக்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு இலட்சமாக இருந்தாலும் சரி அவரவர்களுக்கு இயன்றதை கொடுத்து இந்த முயற்சியை வெற்றி பெற செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.
இது புற்று நோயால் பாதிக்கபட்டவர்களுக்காக என்றோ? அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்காக வேண்டியோ செய்யபடுகிற முயற்சி அல்ல. நம் ஊரில் வாழ்கின்ற அத்தனை மக்களுக்காகவும், நம் பிற்கால சந்ததிகளுக்காகவும் செய்யபடுகிற ஒரு முயற்சி.
எனவே இதற்காக கொடுக்கின்ற ஒவ்வொரு ரூபாயிக்கும் காலாகாலமும் தொடராக நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொண்டு உதவிடுங்கள்.
------------------------------------------------
வேண்டுகோள் :
இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் உதவிடுவதுடன், மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவச் செய்வீராக.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனின் கருணையினால் CFFC யின் முயற்சிகள் வெற்றி பெற்று , நம் மக்கள் அனைவரையும் கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross