காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள குழுமம் CANCER FACT FINDING COMMITTEE - CFFC. இக்குழுமத்தின் மூலம் இதுவரை செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதற்குதவியுள்ள காயல் நல மன்றங்கள், இனி செய்யப்பட வேண்டிய பணிகள், அதற்காக எதிர்பார்க்கப்படும் காயலர்களின் ஒத்துழைப்புகள் குறித்து CFFC ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புள்ளம் கொண்ட காயலர்களே, உங்கள் அனைவருக்கும் CFFC யின் சார்பில் எங்களின் ஸலாத்தினை உரித்தாக்குகிறோம். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
CFFC என்ற கேன்சர் நோயின் காரணிகளை கண்டறியும் குழு அல்லாஹ்வின் பேரருளாலும், எங்களையும்-எங்கள் செயல்திட்டங்களையும் அங்கீகரித்து, பொருளாதார ஒத்துழைப்புகளை தந்தருளிய கத்தார், ஜித்தாஹ், சிங்கை, ரியாத் மற்றும் குவைத் காயல் நல மன்றங்களின் பேராதரவாலும், தனது எல்லையை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது.
எங்களின் செயலாக்கத் திட்டத்தின் மொத்த செலவீனங்கள் ரூ.5 லட்சம் வரை ஆகும் என்று ஏன்கனவே அறிவித்திருந்தோம். ஆனால் CFFCக்கு வசூலில் கிடைத்த பணத்தை வைத்து எங்களால் எதுவரை பயணிக்க முடியுமோ அதுவரை பயணித்து வந்துள்ளோம். கடல் தண்ணீர் மற்றும் காற்று சோதனை செய்து முடித்தாகிவிட்டது. முடிவுகள் அதனுடைய ஆய்வறிக்கையுடன் வெகு விரைவில் வெளியிடப்படும்.
CFFCயின் அடுத்தகட்ட நடவடிக்கையாக மொபைல் டவர்களிலிருந்து ஏற்படும் கதிரியக்க வீச்சுக்கள் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் மற்றும் நமதூரில் நிறுவப்பட்டிருக்கும் மொபைல் டவர்கள் Standard Codeகளை சரிவர பின்பற்றபபட்டுள்ளனவா என்பதை அறியும் ஒரு சோதனையும் செய்யப்படவேண்டியுள்ளது. இச்சோதனைக்கு மட்டும் ரூ.1,76,000 செலவாகும் என்று quotation வந்திருக்கிறது. இந்த சோதனையை நாம் நமது ஊரில் கண்டிப்பாக செய்துதான் ஆகவேண்டிய ஒரு கட்டாயம் நம்மிடையே உள்ளது.
எந்த ஒரு கருத்தையும் யாரோ சொன்னார்கள் என்று ஏற்று, விட்டு விடாமல் அதில் இருக்கும் நன்மை தீமைகளை நாமே அறிந்து மக்களுக்கு தெரிவிப்பதில் CFFC உறுதியாக உள்ளது. ஊர் நலம் என்று வரும்போது இந்த தொகை ஒன்றும் பெரியதாக இல்லாவிட்டாலும், CFFCயிடம் போதுமான நிதி இல்லாததால், நாங்கள் பொதுமக்களிடம் நேரடியாக உதவி கோரி இந்த வேண்டுதலை உங்கள் முன் வைக்கிறோம்.
நமது ஊரின் நலனில் அக்கறை உள்ள, CFFC யின் செயல்பாடுகளில் நம்பிக்கை உள்ள அனைவரும் தயவுசெய்து உங்களின் மேலான பொருளாதார ஒத்துழைப்புகளை இக்ரா செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களுக்கு அனுப்பி தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இதற்காக நிதியுதவி செய்வோரின் பட்டியல், நன்கொடையாளர்களின் விருப்ப அடிப்படையில் காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் தினமும் update செய்யப்படும். எங்களின் பணிகள் முடியும் தருவாயில் CFFCயின் எல்லா வரவு செலவுகளும் நமது இதே வலைதளத்தில் அறிவிக்கப்படும்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது அனைவரின் முயற்சிகளையும் வெற்றியாக்கி தருவானகவும் ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |